5,000 கோடி சொத்தாம்... சிங்கப்பூரில் நகைக்கடைகளாம்- தலை சுற்ற வைக்கும் சோட்டா ராஜன் சொத்து!!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கைதான சோட்டா ராஜனுக்கு ரூபாய் 5 ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துக்களும், சிங்கப்பூரில் நகைக்கடைகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்குமேலாக தலைமறைவாக இருந்து வந்த மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா ராஜன் சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு இந்தியா உள்பட வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருக்கும் அதிர்ச்சி தகவலை மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ரூ.5000 கோடி சொத்து:
சோட்டா ராஜனுக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி முதல் ரூபாய் 5 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் இருக்கின்றன. இதில் பெரும்பகுதி இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

மும்பையில் முதலீடு:
அதிலும் குறிப்பாக மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அவர் தனது சொத்துக்களை முதலீடு செய்து இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் ஹோட்டல்:
சீனா மற்றும் ஜகார்த்தாவில் சோட்டா ராஜனுக்கு சொந்தமாக ஓட்டல்களும், சிங்கப்பூரில் நகைக்கடைகளும் இருக்கின்றன.

ஜிம்பாப்வேயில் வைர பிசினஸ்:
மேலும் ஜிம்பாப்வேயில் வைர வியாபாரத்திலும் சோட்டா ராஜன் தனது பணத்தை முதலீடு செய்து இருப்பதாகவும், இதனால் அந்நாட்டில் குடியேற திட்டமிட்டுள்ளார்.

கைவிட்ட ஜிம்பாப்வே அரசு:
ஆனால் அதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக மும்பை போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications