பணத்தை திருடிய கணவரை சுட்டுக் கொன்று உடலை துண்டங்களாக்கி வேக வைத்த கோபக்கார மனைவி

Subscribe to Oneindia Tamil

சாண்டியா: பணத்தை திருடியதற்காக கணவரை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வேக வைத்த மனைவியை சிலி போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலி நாட்டில் சாண்டியாவின் தென்பகுதியில் உள்ள மோலினா நகரில் வசித்து வந்த கிளவ்டியா ஆண்ட்ரியா முனூஸ் (44) என்பவரின் மனைவி ரோசன்னா ஆண்டிரியா வால்டெஸ் (38). இங்கிலாந்தைச் சேர்ந்த ரோசன்னா தனது கணவருக்குத் தெரியாமல் வீட்டில் மரப்பெட்டி ஒன்றில் பணம் சேமித்து வந்துள்ளார்.

ஆனால், அதை எப்படியோ மோப்பம் பிடித்த முனூஸ் மரப்பெட்டியில் இருந்த 9 ஆயிரம் அமெரிக்க டாலர்களை திருடிச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோசன்னா, இது தொடர்பாக முனூஸ் உடன் சண்டை போட்டுள்ளார்.

சண்டையினூடே கோபத்தில் தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார் ரோசன்னா. இதில் சம்பவ இடத்திலேயே முனூஸ் பரிதாபமாகப் பலியானார். ஆனாலும், ஆத்திரமடங்காத ரோசன்னா தனது கணவரின் உடலை துண்டங்களாக்கி ஒரு பானையில் போட்டு பல மணி நேரம் வேக வைத்துள்ளார்.

பின்னர் வேகவைத்த கணவரின் உடல் பாகங்களை ஒரு நைலான் பேக்கில் போட்டு, அதனை தனது காரின் பின்புறம் வைத்து எடுத்துச் சென்று போலீசில் சரணடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+