"ஒரு தம்பதி இரு குழந்தை” திட்டம் விரைவில் எளிதாகும்- சீனா அரசு முடிவு
பீஜிங்: சீனாவில் நடைமுறையில் இருக்கும் "ஒரு தம்பதி இரு குழந்தை" திட்டத்தினை இன்னும் எளிதாக்க உள்ளது அந்நாட்டு அரசு.
சீனா மக்கள் தொகை எண்ணிக்கையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் ‘‘ஒரு தம்பதியர் ஒரு குழந்தை'' என்ற குடும்ப கட்டுப்பாடு கொள்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருந்துவந்ததை தொடர்ந்து, கணவன், மனைவி இருவர்களில் யாராவது ஒருவர் அவர்களது குடும்பத்தில் ஒரே வாரிசாக இருந்தால் அந்த தம்பதியர் 2 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு கடந்த 2013 ஆம் ஆண்டில் அறிவித்தது.

சீன மக்கள் வலியுறுத்தல்:
எனினும் குடும்ப கட்டுப்பாடுக் கொள்கையை முற்றிலும் திருத்தி அனைவரும் 2 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கும் படி சீன மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

30 சதவீதம் முதியோர்:
மேலும் சீனாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. சீன மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் முதியோர்களாகவே உள்ளனர். இதனால் அங்கு தொழில் திறன் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

2வது குழந்தை அவசியமே:
இதையடுத்து சீனாவில் அனைவரும் 2 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

அடுத்த ஆண்டில் நடைமுறையாகும்:
இந்த குழு தற்போது இது தொடர்பான வரைவு திருத்த கொள்கையை தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவுக்கு அனுப்பி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ‘‘ஒரு தம்பதியர் 2 குழந்தைகள்'' திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications