For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் நுழைந்து இந்தியா பதற்றத்தை தூண்டுகிறது.. சீனா போடும் டிராமா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன எல்லையில் அத்துமீறி நுழைந்தது இல்லாமல் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் பிரச்சினையை தூண்டிவிட வேண்டாம் என்றும் இந்தியாவிடம் சீன வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended Video

    India China border-ல் 20 இந்திய வீரர்களை கொன்ற சீன ராணுவம்..பதிலடிக்கு தயாராகும் இந்தியா

    லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய தரப்பில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் சீன வீரர்கள் 5 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்ததாகவும் அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது அவர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    ஒரு குண்டு கூட பாயவில்லை.. லடாக்கில் கற்கள், குச்சிகளால் மட்டும் நடந்த கொடூர சண்டை.. பகீர் காரணம்! ஒரு குண்டு கூட பாயவில்லை.. லடாக்கில் கற்கள், குச்சிகளால் மட்டும் நடந்த கொடூர சண்டை.. பகீர் காரணம்!

    கைகலப்பு

    கைகலப்பு

    இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோ லீஜியனிடம் சீனாவின் அத்துமீறல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் திங்கள்கிழமை அன்று இந்திய ராணுவம் இரு முறை எல்லைத் தாண்டினர். இதுவே சீன ராணுவத்தினர் அவர்களை தாக்குவதற்கு தூண்டிவிட்டது. இதனால் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    பிரச்சினை

    பிரச்சினை

    இந்தியா நல்ல அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அதன் படைகள் முன்னேறி வருவதை தடுக்க வேண்டும் என நாங்கள் மீண்டும் இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். இந்தியா அதன் எல்லையை தாண்டக் கூடாது, பிரச்சினையை தூண்டி விடக் கூடாது, ஒரு தலைபட்ச நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    எல்லைத் தாண்டியது

    எல்லைத் தாண்டியது

    மற்றுபடி எங்கள் மீதே முழுக்க முழுக்க குற்றம்சாட்டி இந்திய ராணுவம் அளித்த அறிக்கை தவறு. உங்களுக்கு கொடுத்த தகவல்கள் குறித்து எனக்கு தெரியாது. பதற்றத்தை தணிக்கவும் அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது என்றார்.

    இரு நாடுகள்

    இரு நாடுகள்

    2,200 மைல் தொலைவு உள்ள எல்லையில் இந்தியா- சீனா அவ்வப்போது மோதி கொள்வதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நடந்த மாநாடுகளின் போது இரு நாடுகளிடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China asked India not to Stir up the trouble by crossing into its territory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X