அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு
பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர்.

7 வருடங்கள்
310 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2014ம் ஆண்டு துவங்கப்பட்டு, இந்த நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 67.22 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை சீன நகரமான நைஞ்சியில் உள்ள பேட் டவுன்ஷிப்பை, மெடோக் கவுண்டியில் உள்ள பைபங் டவுன்ஷிப்புடன் இணைக்கிறது. இரு நகரங்கள் இடையிலான பயண நேரத்தை இந்த சாலை 8 மணி நேரம் குறைக்குமாம்.

அருணாச்சல பிரதேசம்
மெடாக் என்பது, திபெத்தின் கடைசி மாவட்டமாகும், இது அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. அருணாச்சல பிரதேசம் தனது பிரதேசத்தின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து வம்பு செய்து வருவதால், இந்த சாலை திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், அருணாச்சல பிரதேசத்தின் மீதான எந்தவொரு சீனாவின் உரிமையையும், இந்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது.

அணை திட்டம்
பிரம்மபுத்ரா நதியில் மெகா அணை கட்டும் திட்டத்திற்கு சீனா ஏற்கனவே அனுமதித்துள்ளது. இது இந்தியாவால் எதிர்க்கப்படும் திட்டமாகும். இந்த திட்டம் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக வம்பு செய்யும் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் படைகளை குவித்து வருகிறது.

ராணுவ வீரர்கள்
இன்னொரு பக்கம், கிழக்கு லடாக் பகுதியில் சீனா ராணுவம் மீண்டும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் சீனாவின் பயிற்சி முகாம்களில் கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கோக்ரா மலை அருகிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ், டெஸ்பாங், சிஎன்என் ஜங்சன் பகுதிகளில் சீனா கூடுதல் படைகளை களமிறக்க தொடங்கி உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications