பெருத்த சந்தேகம்.. தடுப்பூசிகள் போட்டும் எகிறும் கொரோனா தொற்று.. கலங்கும் சீனா.. மீண்டும் லாக்டவுன்
சீனாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது
பீஜிங்: போதுமான அளவுக்கு சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன... அதேசமயம் தொற்று வேகமாக பரவி வருவதால், சீனாவில் லாக்டவுன் அமலாகி உள்ளது.
Recommended Video
முதன்முதலில் கொரோனாவைரஸ் சீனாவில்தான் தோன்றியது.. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. ஆனாலும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும் சீனாதான்.
அதனால் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரமாகவே திரும்பிவிட்டது.. நாட்டின் பொருளாதார விஷயத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்து கொண்டது.

எச்சரிக்கை
உலகமெல்லாம் 2வது அலை மிரட்டி கொண்டிருந்தபோதுகூட, சீனாவில் 2வது அலை பாதிப்பு வரவே இல்லை. இப்போது சமீப காலமாகவே தொற்று உயர்ந்து வருகிறது.. ஞாயிற்றுக்கிழமை வரை பதிவான 133 நோய்த்தொற்றுகளில், 106 பேர் 13 சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்று சீன சுகாதார துறை தெரிவிக்கிறது. டெல்டா வகை வைரஸ் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹாட்ஸ்பாட்டாக இஜினா நகரம் எச்சரிக்கப்பட்டு அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது... டெல்டா வைரஸ் பரவல் இங்குதான் அதிகமாகும் என்கிறார்கள்..

சந்தேகம்
இதைதவிர, நிங்சியா, பீஜிங், ஹூனான் ஆகிய மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன... இது சீன அரசை நிலைகுலைய வைத்து வருகிறது..சீனாவின் மக்கள்தொகையில் சுமார் 75 சதவிகிதம், அதாவது நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது... இதுததான் பெருத்த சந்தேகமாக எழுந்துள்ளது..

தடுப்பூசிகள்
கடந்த 4 நாட்களாகவே, தலைநகர் பீஜிங்கில் யாருமே நுழைய கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்ஃபுயுவான் என்ற பகுதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது... அங்கு 30 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்... 20 ஆயிரத்திற்கு அதிகமான சுகாதார பணியாளர்கள், அந்நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

தள்ளிவைப்பு
பிப்ரவரியில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு நகரம் தயாராகும் நிலையில், பெய்ஜிங்கில் தொற்றை கட்டுப்படுத்த, சீன அரசு இப்போதே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது... கொரோனா பரவலை தொடர்ந்து அக்டோபர் 31 அன்று திட்டமிடப்பட்டிருந்த மாரத்தான் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... ஆனால், மறுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications