இலங்கையின் இந்த நிலைமைக்கு நாங்க காரணம் கிடையாது. . விளக்கும் சீனா
பீஜிங்: இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்க நாங்கள் காரணமில்லை என சீனா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் அங்குள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர். அத்தியாவசிய மருந்து பொருட்கள் கூட இல்லாமல் அவல நிலைக்கு இலங்கை பொருளாதாரம் சென்றது.

700 மில்லியன் டாலர் கடன் உதவி
வெளிநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவால் நிலையை அறிவித்த இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடியது. இத்தகைய இக்கட்டான சூழலில் இலங்கைக்கு அதன் அண்டை நாடான இந்தியா கடனுதவி அளித்தது. 700 மில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அளித்த இந்தியா, அதன் அடிப்படையில் எரிபொருள் உள்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு உதவியது. ஆனால், இலங்கையில் பெருமளவு முதலீடு செய்து இருக்கும் சீனா எதிர்பார்த்த அளவுக்கு உதவ வில்லை. ஏனெனில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் சீனா முதலீடுகளுக்கு கதவை திறந்து விட்டனர்.

சீனா மறுத்துவிட்டது
குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு இலங்கை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது. இலங்கையின் இந்த செயல் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி பல திட்டங்களை சீன நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது. அதேபோல், சீனாவும் அதிக வட்டிக்கு கடன் அளித்து இலங்கை நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்தன. இலங்கையின் மொத்த கடனில் 10 சதவீதம் அளவுக்கு சீனாவின் கடன்கள் உள்ள நிலையில், கடனுக்கு சலுகை அளிக்க சீனா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

விமர்சிப்பு
இந்த சூழலில், இன்று அமெரிக்க அதிகாரி சமந்தா பவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், சீனா இலங்கைக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி, இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும், 2000-ம் ஆண்டின் மத்தியில் இருந்து இலங்கைக்கு சீனா கடன் வழங்குவதில் முன்னணியில் இருப்பதாகவும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நீண்ட கால கடன்களே வழங்கியது
இதற்கு பதிலளித்த லிஜியான், சீனா- இந்தியா இடையேயான எதார்த்த ஒத்துழப்பானது அறிவியல் பூர்வமான திட்டமிடுதலுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. சீனா இலங்கைக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால கடன்களே வழங்கியது. இலங்கையின் உள்கட்டமைப்பையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த இது முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கா திடீரென வட்டி விகிதங்களை உயர்த்தியதால் உலக பொருளாதாரம் மற்றும் நிதி சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்காவின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளும் தொழில்துறை விநியோக சங்கிலியை பாதித்தது. இதனால், எரிசக்தி துறை, உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலையும் மோசமான அளவில் அதிகரித்தது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications