அமெரிக்காவுக்கு செக்.. சீனா களமிறக்கிய புது டிராகன்! உற்றுநோக்கும் இந்தியா!
பெய்ஜிங்: உலகின் மிகவும் அதி நவீனமான விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இது தைவான் நீரிணையில் ரோந்து பணியில் இருக்கும். இக்கப்பல் அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் இந்தியாவும் இந்த கப்பல் மீது ஒரு கண்ணை வைத்திருக்கிறது.
ராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் இடையே கடல் இருப்பதை, போல சீனாவின் 'ஃபூஜியன்' மாநிலத்திற்கும், தைவானுக்கும் இடையில் கடல் இருக்கிறது. இதை தைவான் நீரிணை என்று அழைப்பார்கள். சர்வதேச கடல் போக்குவரத்தில் 5ல் 1 பங்கு இந்த வழியாகத்தான் நடக்கிறது.

தைவான் மேட்டர்
ஆசியாவிலிருந்து கப்பல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு போக வேண்டும் எனில் இதுதான் ஷார்ட் கட். தைவானே எங்களுக்குதான் சொந்தம், அப்படி இருக்கும்போது இந்த கடல் பகுதியும் எங்களுக்குதான் சொந்தம் என சீனா உரிமை கோர.. தைவான், "இல்லை, இல்லை. நாங்க சுதந்திர நாடு. இந்த கடல் பகுதி எங்களுக்கு சொந்தம்" என கூறியிருக்கிறது. தைவானுக்கு அமெரிக்கா சப்போர்ட். எனவே இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது.
சக்தி வாய்ந்த போர்க்கப்பல்
இந்த பிரச்சனையின் பின்னணியில்தான் தற்போது சீனா 'ஃபூஜியன்' என்கிற பெயரில் விமானம் தாங்கி போர் கப்பலை களமிறங்கியிருக்கிறது. இது அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி போர் கப்பலாகும். அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்படியான போர் கப்பல் உலகில் இரண்டு நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. ஒன்று அமெரிக்கா, இரண்டாவது சீனா. அப்படியெனில் இது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
புதிய தொழில்நுட்பத்தில் கப்பல்
இந்த கப்பல் Type 003 ரகத்தை சேர்ந்தது. அதாவது இதிலிருந்து விமானங்கள் எளிதாக பறக்க முடியும். விமானம் தாங்கி போர்க்கப்பல் என்றாலே, அதில் விமானங்கள் இறங்கி ஏறும். ஆனால் சாதாரண விமானம் தாங்கி கப்பல்களில் அதிக எடை கொண்ட KJ-600 ரக விமானங்கள் இறங்காது. ஃபூஜியன் கப்பலில் இந்த விமானங்கள் எளிதாக தரையிறங்கி, டேக் ஆப் செய்ய முடியும். ஏனெனில் இந்த கப்பலில் EMALS தொழில்நுட்பம் இருக்கிறது.
EMALS தொழில்நுட்பம்
பொதுவாக விமானங்கள் உயரே பறக்க நீண்ட தூரம் தரையில் ஓட வேண்டும். பின்னர் டேக் ஆப் ஆகும். போர் விமானங்கள் கொஞ்ச தூரம் ஓடினால் போதும். என்னதான் போர் விமானங்கள் குறைவான தூரத்தில் டேக் ஆஃப் ஆகும் என்றாலும், விமானம் தாங்கி போர் கப்பலில் இருக்கும் தூரம் டேக் ஆஃப் ஆக போதுமானது கிடையாது. எனவே விமானங்களை வேகமாக இயக்கி, குறைந்த தூரத்தில் டேக் ஆஃப் செய்ய வைக்க நீராவி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது விமானத்தின் முன் சக்கரம் உள்ள பகுதி கப்பலில் ஒரு கொக்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும். விமானத்தின் என்ஜின் ஆன் செய்யப்பட்டு, அது முழு வேகத்தை எட்டும்போது, சட்டென இந்த கொக்கி விமானத்தை நேர்கோட்டில் இழுத்து சென்று கப்பலின் முனையில் விடுவிக்கும். இந்த வேகம் விமானம் டேக் ஆஃப் ஆக போதுமானது.
இந்தியா உஷாராக வேண்டும்
இந்த நீராவி தொழில்நுட்பத்தின் அப்கிரேடு வெர்ஷன்தான் இந்த EMALS தொழில்நுட்பம். எலக்ட்ரோ மேக்னடிக் லான்ச் சிஸ்டம் என்பதன் சுருக்கமே EMALS. நீராவி தொழில்நுட்பம் மூலம் விமானத்தை டேக் ஆஃப் செய்வதை விட, இந்த EMALS தொழில்நுட்பம் மூலம் விமானங்களை டேக் ஆஃப் செய்யும்போது எரிபொருள் வீணாவது குறையும். எனவே போர் விமானங்கள் அதிக தூரம் பயணிக்கும். அதேபோல அதிக எடை கொண்ட KJ-600 ரக விமானங்களையும் இந்த தொழில்நுட்பம் வைத்து டேக் ஆப் செய்ய முடியும்.
இப்படி பல அதிநவீன தொழில்நுட்பங்களை இந்த கப்பல் கொண்டிருக்கிறது. தைவான் மேட்டரில் அமெரிக்கா மூக்கை நுழைத்திருக்கும் நிலையில், இந்த 'ஃபூஜியன்' கப்பல், அமெரிக்காவுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும். அதேபோல இந்தியாவும் இனி உஷாராக இருக்க வேண்டும். விமானம் தாங்கி போர்க்கப்பல் உற்பத்தியில் நாம் இன்னும் நவீனமயமாக வேண்டும் என்பதை சீனா உணர்த்தியிருக்கிறது.
-
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications