For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது நாங்க உண்மையை மறைக்கிறோமா..உலக சுகாதார அமைப்பு மீது பாய்ந்த சீனா..என்ன சொல்றாங்க பாருங்க

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் பரவியிருக்கும் பிஎப் 7 வகை கொரோனாவால் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சீனாவோ பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் சீனாவை விமர்சித்து வருகிறது. அதேபோல், உலக சுகாதார நிறுவனமும் சீனா கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக கூறியது.

உலக நாடுகளுக்கு முதன் முதலாக கொரோனா வைரசை அறிமுகப்படுத்திய நாடு சீனா. சீனாவின் உகான் நகரில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுமாறிய உலக நாடுகள் பொதுமுடக்கம் சமூக இடைவெளி போன்ற ஆயுதத்தை முதலில் கையில் எடுத்தது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

'முழு பூசணிக்காய்' கொரோனா பாதிப்பை மறைக்கும் சீனா..போட்டு உடைத்த WHO..என்ன சொல்லி இருக்கு தெரியுமா? 'முழு பூசணிக்காய்' கொரோனா பாதிப்பை மறைக்கும் சீனா..போட்டு உடைத்த WHO..என்ன சொல்லி இருக்கு தெரியுமா?

கொரோனாவின் சுழலில் சீனா

கொரோனாவின் சுழலில் சீனா

கிட்டதட்ட 2 ஆண்டுகளகாக நீடித்த கொரோனா கட்டுப்பாடுகள்..கொரோனாவின் வீரியம் ஓரளவுக்கு குறைந்த பிறகே தளர்த்தப்பட்டன. தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டதால், கொரோனாவின் வீரியம் குறைந்தது. இதனால், உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. ஆனால், இந்த களேபரங்களை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சீனா தற்போது கொரோனாவின் சுழலில் சிக்கியிருக்கிறது.

மிக கடுமையான கட்டுப்பாடுகள்

மிக கடுமையான கட்டுப்பாடுகள்

ஆரம்பத்தில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை அமல்படுத்தி மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய சீனா.. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக கூறி வந்தது. பல லட்சம் பேர் வசிக்கும் நகரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் கூட ஒட்டு மொத்த நகரத்தையும் முடக்கி கொரோனா பரிசோதனை நடத்தியது. மக்கள் வெளியில் செல்வதற்கு பயண தடை என ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு

தடுப்பூசிகளில் கவனம் செலுத்தாத சீனா கட்டுப்பாடுகள் விதித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில் தான் ஆர்வம் காட்டியது. இதனால், சலித்து போன மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட தொடங்கினர். இதையடுத்து வேறு வழியின்றி கொரோனா கட்டுப்பாடுகளை விலக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீனா தள்ளப்பட்டது. இதற்கு மத்தியில் பிஎப் 7 வகை என்ற ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட் சீனாவில் பரவியதால் அங்கு கொரோனா பரவல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்தது.

உண்மை தகவலை பகிரவில்லை

உண்மை தகவலை பகிரவில்லை

நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் கொரோனா பாதிப்பு பதிவானதாகவும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து சீனா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. உண்மையான கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடாமல் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் குற்றச்சாட்டு முன் வைத்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்து சீனா உண்மை தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை என உலக சுகாதார அமைப்பு தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது.

வேறுவேறாக இருப்பதாக குற்றச்சாட்டு

வேறுவேறாக இருப்பதாக குற்றச்சாட்டு

சீனாவின் பாதிப்பு நிலவரங்கள் உடனடியாக கிடைத்தாலும் அந்நாடு பாதிப்புகளையும் இறப்புகளையும் மிகவும் குறைவாகவே பதிவு செய்கிறது எனவும் தற்போது அந்நாடு தரும் தகவல்கள் பாதிப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் இல்லை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனா தொடர்பாக அந்நாடு தரும் எண்ணிக்கையும் உண்மை நிலவரமும் வேறுவேறாக இருப்பதாக ஹு குற்றம் சாட்டி இருக்கிறது. இந்த நிலையில், வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்ற உலக சுகாதார அமைப்பின் குற்றச்சாட்டை சீனா கடுமையாக சாடியுள்ளது.

கொரோனா மரபணு மாற்றம்

கொரோனா மரபணு மாற்றம்

இன்று செய்தியாளர்களை சந்தித்த சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பாக கூறுகையில், "கொரோனா விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் அவ்வப்போது ஆலோசித்து வருவதாகவும் கடந்த மாதத்தில் டெக்னிக்கல் ரீதியாக பல்வேறு தகவல்களை அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை, பெருந்தொற்று நிலவரம் , கண்காணிப்பு, தடுப்பூசி ஆகியவை குறித்தும் உலக சுகாதார அமைப்பிடம் ஆலோசித்து இருக்கிறது. உள்ளூர் அதிகாரிகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் கொரோனா மரபணு மாற்றம் குறித்து ஆலோசித்து இருப்பதாகவும் கூறினார்.

English summary
It is said that the corona virus has spread uncontrollably in China due to the PF7 type of corona that has spread in China. However, China is refusing to disclose the details of the Corona virus without being overly concerned. Many countries of the world are criticizing China for this. Similarly, the World Health Organization has also said that China is covering up the death toll from Corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X