"சீனா எங்களின் நண்பன்".. உய்குர் முஸ்லீம்களை விட மாட்டோம்.. ஆப்கானில் தாலிபான் பரபரப்பு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

காபுல்: ஆப்கானிஸ்தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தாலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Afghan-ல் மீண்டும் Taliban ஆட்டம் | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி வருகிறது. கடந்த 2 வாரங்களில் ஆப்கானிஸ்தானில் 85% இடங்களை ஆக்கிரமித்துவிட்டோம் என்று தாலிபான் அறிவித்துள்ளது.

    400 மாவட்டங்களில் 250+ மாவட்டங்கள் தற்போது தாலிபான் கட்டுப்பாட்டுள்ளது. அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியேறிய பின் மீதம் இருக்கும் மாவட்டங்களையும் தாலிபான் கட்டுப்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

    அச்சம்

    அச்சம்

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தால் அங்கு மீண்டும் அல் கொய்தா அமைப்பிற்கும் இடம் கிடைக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவை விட சீனாவைத்தான் இது அதிக அச்சத்திற்கு உள்ளாக்கியது. ஏனென்றால் அல் கொய்தா அமைப்பு கிழக்கு தர்கிஸ்தான் இஸ்லாமியம் மூவ்மெண்ட் ( East Turkistan Islamic Movement - ETIM) என்ற அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

     சீனா

    சீனா

    இந்த ETIM அமைப்பு சீனாவின் உய்குர் முஸ்லீம்களுக்கு ஆதரவானது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிங்ஜியாங் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து உய்குர் இஸ்லாமியர்களுக்கு அங்கு தனி நாடு ஏற்படுத்தும் முயற்சியில் இந்த அமைப்பு உள்ளது. இந்த அமைப்பிற்கு தாலிபான் ஆதரவாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில்தான் தாலிபான் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.

    கட்டுப்பாடு

    கட்டுப்பாடு

    அமெரிக்கா அவசரப்பட்டு ஆபகானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டது. அமெரிக்க செய்தது தவறு. தாலிபானின் எழுச்சியை தடுக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். நாங்களும் போதுமான உதவிகளை செய்ய தயார் என்று சீனா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவிற்கு நாங்கள் நட்பு நாடு என்று ஆப்கானிஸ்தானின் தாலிபான் தெரிவித்துள்ளது.

    அனுமதிக்க மாட்டோம்

    அனுமதிக்க மாட்டோம்

    தாலிபான் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பிட்டில், சீனா எப்போதும் எங்களுக்கு நல்ல நண்பன். உய்குர் முஸ்லீம்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆதரவாக நாங்கள் இயங்க மாட்டோம். அவர்களை ஆப்கானிஸ்தானுக்குள் அனுமதிக்க மாட்டோம். சீனாவுடன் உறவை நாங்கள் மேம்படுத்துவோம். விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவோம்.

    அனுமதிக்க மாட்டோம்

    அனுமதிக்க மாட்டோம்

    உய்குர் அகதிகளை உள்ளே அனுமதிக்க மாட்டோம். அதேபோல் அல் கொய்தா உள்ளிட்ட எந்த தீவிரவாத அமைப்பிற்கும் ஆப்கானிஸ்தானில் இயங்க அனுமதி தர மாட்டோம். சீனாவுடன் எங்கள் நட்பை புதுப்பித்த, நாங்கள் நல்ல உறவை பேணுவோம். ஆப்கானிஸ்தானில் சீனாவின் வளர்ச்சி பணிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்று, தாலிபான் தெரிவித்துள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தாலிபானின் இந்த அறிவிப்பு உய்குர் இஸ்லாமியர்களை இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் உதவியுடன் ஜிங்ஜியாங் பகுதியில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தஹ்னில் குடியேறலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தனர். ஆனால் தாலிபானின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+