சீனா மீண்டும் அடாவடி.. இந்திய எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க திட்டம்.. எதற்காகவாம் தெரியுமா?
பீஜிங்: அருணாசல பிரதேச எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்கும் பணியை சீனா தொடங்க திட்டமிட்டுள்ளதாம். இந்த கிராமங்கள் கண்காணிப்பு இடங்களாகவும் ராணுவ தளங்களாகவும் செயல்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆசியாவில் யாரும் அசைக்கவே முடியாத நாடாக வர வேண்டும் என்பது சீனாவின் கனவாக உள்ளது. சீனாவின் இந்த கனவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நாடு இந்தியா தான். இதனால், இந்தியா மீது கோபத்தில் உள்ள சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சர்வதேச அளவில் இந்தியாவை தனிமைப்படுத்த முயற்சித்து அதிலும் தோல்வியை சந்தித்தது சீனா. தற்போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. இதையும் , இந்தியா தனது ராஜதந்திரம் மூலம் லாவகமாக கையாண்டு வருகிறது.
இது ஒருபக்கம் என்றால், சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கவும் முயற்சித்து கொண்டு இருக்கிறது. ஒருபக்கம் தென் சீனக்கடலை உரிமை கொண்டாடும் சீனா, தைவானையும் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. அதே போல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தையும் தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது.
சீனாவின் இந்த அடாவடிக்கு எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் நமது ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பல்வேறு நவீன கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த செயல்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது, அருணாசல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 175 கிராமங்களை சீனா அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ தயார் நிலையை மேம்படுத்தும் விதமாகவும், தனது உரிமை கோரலை வலுப்படுத்தும் விதமாகவும் சீனா இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் கூறூகிறார்கள்.
LAC பகுதியில் 900 கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாகத்தான் சீனா, இந்த 175 கிராமங்கள் அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும் இந்திய எல்லையை ஒட்டி 200 கிராமங்கள் அமைக்கப்பட இருக்கிறதாம்.. இந்த கிராமங்கள் கண்காணிப்பு இடங்களாகவும் ராணுவ தளங்களாகவும் செயல்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவின் இந்த மூவ் பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications