தைவான் எல்லைக்குள் குண்டுகளுடன் சீறி பாய்ந்த சீன போர் விமானங்கள்.. போர் பதற்றம்.. என்னாச்சு?
பீஜிங்: தைவான் நாட்டு விமான பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீன போர் விமானங்கள் ஊடுருவுவது அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா உலகின் பல நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ளது.
பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, 1997 முதல் 50 ஆண்டுகளுக்கு 'ஒரு நாடு, இரு அமைப்பு' என்ற ஏற்பாடு நீடித்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த சுதந்திரங்களை நசுக்கி முழுக்க தனது வல்லாதிக்கத்தின் காலடியில் ஹாங்காங்கை போட்டு நசுக்கும் வகையில், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது சீனா. ஹாங்காங்கே கொந்தளித்து பல போராட்டங்களை நடத்தியது.

இந்தியாவிடமும் வாலாட்டுகிறது
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடனை வாரி கொடுத்து அவற்றையும் தங்கள் காலடியின் கீழே கொண்டு வந்துள்ளது சீனா. அங்கே தொட்டு இங்கே தொட்டு, இந்தியாவிடமும் வாலாட்டி வருகிறது. கிழக்கு லடாக் தொடங்கி, அருணாச்சல பிரதேசம் வரையிலும், சீனா தனது ஆக்கிரமிப்பு ஆசையை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்தின் தீரத்தால் வாலை சுருட்டி வைத்துள்ளது.

தைவானிடம் உரசல்
நிறைவேறாத ஆசை கொண்ட சீனா இப்போது வாலாட்டுவது தைவான் நாட்டிடம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரு நாடுகளும் மோதுவது புதிது கிடையாது. 1949ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவில் தைவான் தனி நாடாக நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் அது ஒரே நாடு என்ற தங்களது கொள்கையின் கீழ் தங்களுடைய நாடுதான் என்று சீனா கூறி வருகிறது. இதனால் உரசல்கள் இருந்து வந்தாலும், இப்போது தாய்வான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் புகுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்வான் ரேடார்கள் இந்த ஊடுருவலை பதிவு செய்துள்ளன.
Recommended Video

விமான எண்ணிக்கை
இந்த மாத துவக்கத்தில் சீன போர் விமானங்களின் போக்குவரத்து எண்ணிக்கை இந்த பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்ட நாளில் 149 விமானங்கள் தாய்வான் தென்மேற்கு எல்லைக்குள் பறந்துள்ளன. கடந்த வருடம் 380 முறை தென்மேற்கு விமான மண்டலத்திற்குள் சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. ஆனால் இந்த வருடம் அக்டோபர் 22ம் தேதி வரையிலான நிலவரப்படி, 692 முறை இதுபோல நடந்துள்ளது.

குண்டு வீசும் போர் விமானங்கள்
இந்த மாதம் ஊடுருவிய 124 போர் விமானங்களில் 16 விமானங்கள் குண்டுகளை வீசக் கூடியவையாகும். 2016ம் ஆண்டு தாய்வானில் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றது முதல்தான் சீனாவின் அட்டூழியமும் அதிகரித்தது. ஏனென்றால் தாய்வான் இறையாண்மை கொண்ட தனி நாடுதானே தவிர, சீனாவின் ஒரு நாடு கொள்கைக்கு உட்பட்ட நாடு கிடையாது என்பது அவரது கொள்கையாக இருந்தது. எனவே தாய்வானை மனரீதியாக பலவீனப்படுத்த சீனா தனது போர் விமானங்களை ஏவி விட ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

அமெரிக்கா கூட்டுறவு
தாய்வான் உடன் அமெரிக்கா நெருக்கம் காட்டுவது சீனாவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு பகிர்ந்தது அமெரிக்கா. மேலும் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள், பிரிட்டன் போர் விமானம், ஜப்பான் போர் ஹெலிகாப்டர் ஆகியவை பசிபிக் மண்டலத்தில் நடைபெற்ற கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றன. தாய்வான் ராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி அளித்தது. இதுவும் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

சீனாவின் திட்டம்
வாஷிங்டனைச் சேர்ந்த குளோபல் தைவான் இன்ஸ்டிடியூட்டின் நிபுணர் ஜே மைக்கேல் கோல் கூறுகையில், சந்தேகத்திற்கிடமின்றி சீனாவை இலக்காகக் கொண்ட பிராந்திய கூட்டணிகளால் நாங்கள் பயப்படவில்லை என்பதை சீனா நிரூபிக்க விரும்புகிறது. எனவேதான் தாய்வானில் தங்கள் போர் விமானங்களை பறக்க விடுகிறது என்கிறார்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications