இதெல்லாம் நியாயமே இல்லை.. பொறுப்பில்லாம பேசறீங்களே.. இந்தியாவின் நிராகரிப்பால்.. சீனா செம டென்ஷன்
ரேபிட் டெஸ்ட் கிட்டினை நிராகரித்ததற்கு சீனா காட்டம் தெரிவித்துள்ளது
பெய்ஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் சரியில்லை என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் நிராகரித்துள்ளதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
Recommended Video
எங்களது தயாரிப்புகள் தரம் குறைந்தவை என்று ஐசிஎம்ஆர் கூறியிருப்பது பொறுப்பற்றது, நியாயமற்றது என்றும் சீனா பாய்ந்துள்ளது. ஆனால் நாம் மட்டும் குறை சொல்லவில்லை, இங்கிலாந்தும் கூட இவர்களிடமிருந்து கிட் வாங்கி ஏமாந்து போயுள்ளனர். பூராம் தப்புத் தப்பாக ரிசல்ட் காட்டியதால் இந்தியா அதிர்ச்சி அடைந்து இதை தடை செய்து விட்டது.

தற்போது எந்த மாநிலமும் சீனாவிலிருந்து வாங்கிய கிட்டை பயன்படுத்தவில்லை. அனைவருமே ரிட்டர்ன் செய்யப் போகிறார்கள். இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் நாங்கள் அந்த நாட்டுக்கு ஆதரவாக நிற்கிறோம். அதேபோல உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்க உதவுகிறோம். இப்படிப்பட்ட நிலையில் சீனத் தயாரிப்புகள் தவறானவை.. பழுதானவை என்று சிலர் வர்ணித்திருப்பது பொறுப்பற்றது.. அநீதியானது.
சீனாவின் நல்லெண்ணெத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் உதவிகளை உடனுக்குடன் சீனா செய்து கொடுத்துள்ளது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதை இந்தியா உணர வேண்டும். வைரஸ் தாக்குல் மனிதகுலத்தின் பொது எதிரி.
இந்த விஷயத்தில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால்தான் இந்த பேரிடரிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார். சீனாவிடமிருந்து இந்தியா கிட்டத்தட்ட 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்கியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் இது தவறான முடிவைக் காட்டியதால் இதை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் கூறி விட்டது.
சீனாவின் வோன்டோப பயோடெக் மற்றும் லிவ்ஜான் டயக்னஸ்டிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து இந்த கிட்டுகளை இந்தியா வாங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications