சீனா அதிரடி.. ஒட்டு மொத்த வூஹான் நகர மக்கள் 1.1 கோடி பேருக்கும் கொரோனா டெஸ்ட்.. காரணம் இதுதான்
பெய்ஜிங்: அறிகுறிகள் இல்லாத 15 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் சீனாவின் வூஹான் நகரில் பதிவாகியுள்ளது. எனவே, நகரிலுள்ள 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்தும் அதிரடி திட்டத்தை அந்த நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது.
Recommended Video
சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) கருத்துப்படி, நேற்று வரை 7 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 கேஸ்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவர், மற்ற ஆறு கேஸ்கள் உள்நாட்டில் பரவியவை.
புதிய அறிகுறியற்ற 8 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என்று என்.எச்.சி தெரிவித்துள்ளது.

டிசம்பர்
கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தாக்கிய இடம் ஹூபே மாகாணம் மற்றும் அதன் தலைநகர் வுஹான்தான்.
ஆனால் வுஹான் நகரத்தில் 598 அறிகுறியற்ற கேஸ்கள் மீண்டும் ஏற்பட்டுள்ளது, மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அறிகுறி இல்லாமல் வைரஸ் பரவினால், அது அதிகம் பேருக்கு பரவ வாய்ப்பு இருப்பதும், அச்சத்திற்கு காரணம்.

ரிஸ்க் வேண்டாம்
வுஹானில் லாக்டவுன் நீக்கப்பட்டு நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே ரிஸ்க் எடுக்க சீனா தயாராக இல்லை. 1.1 கோடி நகர மக்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளது அந்த நாட்டு அரசு. அடுத்த 10 நாட்களில் 1.1 கோடி மக்களிடமும் சோதனை நடத்தும் திட்டத்தை சீனா தயார் செய்துள்ளது.

குற்றச்சாட்டு
வுஹானிலுள்ள வைரஸ் ஆய்வகத்திலிருந்து கொரோனா உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதை சீனாவும், உலக சுகாதார அமைப்பும் மறுத்து வருகின்றன. வூஹானில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில், லாக்டவுன் நீக்கப்பட்டது.

சீனா நிலவரம்
நேற்று நிலவரப்படி சீனாவில் மொத்த, கொரோனா நோயாளி இறப்பு எண்ணிக்கை 4,633 ஆக இருந்தது, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 82,926 ஆக அதிகரித்துள்ளது. இதில் 104 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்பட்டதாக என்.எச்.சி அறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications