சீனா செய்த காரியம்.. இந்தியா, அமெரிக்கா என உலகெங்கும் மோசமான பாதிப்பு! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஜப்பான்
பெய்ஜிங்: சீனா திடீரென கிரிட்டிக்கல் மினரல் (critical mineral exports) மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் குறித்து உலகெங்கும் கவலை எழுந்துள்ளன. இது ஒட்டுமொத்தமாக உலகின் பல நாடுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசுகளுமே கூட எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவில் மக்களாட்சி இல்லை. அங்கு ஜி ஜின்பிங் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறையே இருக்கிறது. இதனால் சீனா திடீர் திடீரென பல நடவடிக்கைகள் எடுக்கும். இது பல நேரங்களில் உலக நாடுகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அதுபோல தான் சீனா இப்போது மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

சீனா கட்டுப்பாடு
அதாவது சீன அரசு திடீரென கிரிட்டிக்கல் மினரல் (critical mineral exports) மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. காந்தங்கள் உட்படப் பல பலவற்றின் ஏற்றுமதிகளுக்குச் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மின்சார மற்றும் பெட்ரோல் வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளுக்கு முக்கியமானதாக உள்ளது. இதற்குச் சீனா திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதியே அமலுக்கு வந்தாலும் இப்போது தான் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கியுள்ளன. சீனா இப்போது மொத்தம் ஏழு அரிய பூமி தனிமங்கள் (REEs) மற்றும் அதனுடன் தொடர்புடைய காந்தங்களை ஏற்றுமதி செய்யச் சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
என்ன மினரல்கள்?
அதில் சமாரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடேடியம், ஸ்காண்டியம் மற்றும் இட்ரியம் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் மின்சார மோட்டார்கள், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முக்கியமானதாக உள்ளது. உலகின் REEகளில் சுமார் 60%ஐ சீனா உற்பத்தி செய்கிறது. மேலும், அரிய மினரல்களின் சுத்திகரிப்பிலும் சுமார் 90%ஐக் கட்டுப்படுத்துகிறது. இதனால் அனைத்து நாடுகளில் உள்ள நிறுவனங்களும் சீனாவையே சேர்ந்து இருந்தன. அவை இப்போது கடும் பாதிப்புகளையும் சந்திக்கத் தொடங்கியுள்ளன.
சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் இதனால் பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கத் தொடங்கியுள்ளதால் சர்வதேச அமைப்புகள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவை வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் சீன அதிகாரிகளுடன் அவசர மீட்டிங்குகளை நடத்தி தேவையான உரிமைகளை அவசர அவசரமாகப் பெற முயன்று வருகிறார்கள்.
பிரச்சினை இருக்கு
இருப்பினும், உரிமம் பெறும் நடைமுறை முடியப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை கூட தாமதமாகலாம் என்ற செய்திகளும் வந்துள்ளன. இது ஐரோப்பிய உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியா
உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையான இந்தியா, இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. தற்போதைய சூழலில் ஜூன் மாதத்திற்குள் வாகன உதிரிப் பாகங்கள் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய ஆடோமொபைல் செக்டாரில் கவலைகளை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்கா கூட இதில் இருந்த தப்பவில்லை. அமெரிக்கா தனது ரேர் எர்த் மெட்டல்களில் 61%ஐ இறக்குமதி தான் செய்கிறது. இட்ரியம்களை 93% சீனாவிலிருந்து பெறுகிறது. இதனால் அமெரிக்காவிலும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக டெஸ்லா மற்றும் அமெரிக்காவின் மிக பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்தி நிறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஜப்பான்
அதேநேரம் சீனா இதுபோல ரேர் எர்த் கனிமங்களை ஆயுதமாக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2010ஆம் ஆண்டில் ஜப்பான் உடனான பிரச்சினை காரணமாக அந்த நாட்டிற்கான ஏற்றுமதியை மட்டும் சீனா தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் ஜப்பான் அப்போதே சீனாவைத் தாண்டி பல நாடுகளில் இருந்தும் கனிமங்களை பெரும் வகையில் நெட்வொர்க்கை உருவாக்கிக் கொண்டது.
ஜப்பானுக்கு நேர்ந்தது தங்களுக்கும் நடக்கலாம் என்பதை மற்ற நாடுகள் கணிக்கத் தவறிவிட்டன. சீனாவைச் சார்ந்து இருப்பதை அமெரிக்கா குறைக்க முயன்ற போதிலும் அது முடியவில்லை. அமெரிக்காவிலேயே பல கனிமங்கள் இருந்தாலும் அதை எடுக்க அதிக செலவாகும் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது சீனா மீண்டும் அதே ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் சிக்கலில் மாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications