ஈரானில்.. சீனாவின் சக்தி வாய்ந்த 5ம் தலைமுறை போர் விமானம்! என்னங்க நடக்குது? ஷாக்கான அமெரிக்கா
தெஹ்ரான்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றுதான் சீனாவின் J-20. இந்த விமானம் தற்போது ஈரானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஈரானை ஒட்டியுள்ள பாரசீக வளைகுடாவில் தனது 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும், அதற்கு துணையாக சிறிய தாக்குதல் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருக்கிறார்.

அதிநவீன ஜே-20 போர் விமானம்
கடந்த வாரம், டிரம்ப் அமெரிக்க கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டை பாரசீக வளைகுடாவிற்கு அனுப்ப உத்தரவிட்டார். அங்கு ஏற்கனவே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உட்பட 9 அமெரிக்க போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இப்படி இருக்கையில்தான் சீன ராணுவ இணை அதிகாரி ஒருவர், ஈரானிய விமானப்படைத் தளபதியிடம் சீனாவின் அதிநவீன ஜே-20 போர் விமானத்தின் மாதிரி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
F-22 Raptor
தற்போது உலக அளவில் 2 விமானங்கள்தான் மிகவும் சக்தி வாய்ந்தவை. F-22 Raptor மற்றும் F-35 Lightning II இந்த இரண்டும் அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்தது. இந்த விமானங்களுக்கு சவால் விடும் ஒரே விமானம் என்றால் அது சீனாவின் J-20தான். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து J-20 செதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஈரானுக்கு தற்போது கொடுக்கப்பட்டது J-20 விமானத்தின் மாதிரிதான். இது பறக்காது.
விமானத்தின் மாதிரி
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, இந்த விமானங்களை சீனா அவ்வளவு சீக்கிரத்தில் ஈரானுக்கு கொடுக்காது. ஏனெனில் உள்நாட்ட தேவைக்காவே இந்த வகை விமானங்கள் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் தற்போது விமானத்தின் மாதிரி கொடுக்கப்பட்டிருப்பது, ஈரான் உடன் சீனா பக்க பலமாக நிற்கும் என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
ஏற்கனவே ஈரானுக்கு ட்ரோன்கள், ஏவுகணை தொழில்நுட்பம், ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை சீனா கொடுத்திருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் HQ-9B நீண்ட தூர மேற்பரப்பில் இருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணை (SAM) அமைப்பு மற்றும் YLC-8B ரேடார்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது. மட்டுமல்லாது ஹைப்பர்சோனிக் திறன் கொண்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான டோங்ஃபெங்-17 (DF-17) இவற்றையும் சீனா கொடுத்திருக்கிறது.3
ஈரானுக்கு என்ன தேவை?
உண்மையில் தற்போது ஈரானுக்கு தேவையானது போர் விமானங்கள் கிடையாது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும், மிகவும் மேம்பட்ட ரேடார் அமைப்புகளும்தான். அதையும் சீனா கொடுத்திருக்கிறது. சீனா கொடுத்த மீட்டர்-வேவ் ரேடார்கள், அமெரிக்காவின் F-35 விமானங்களை கூட கண்டறியும் திறன் கொண்டவை. எனவே இந்த விஷயங்கள் சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications