For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் எதிர்ப்புகளை மீறி சீனாவில் களைகட்டிய நாய்க்கறி திருவிழா

By Mathi
Google Oneindia Tamil News

யூலின்: விலங்குகள் நல ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புகளை மீறி சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் நாய்க்கறி திருவிழா தொடங்கியுள்ளது.

சீனாவின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். நாய்களை பலி கொடுத்து இத்திருவிழாவை நடத்தினால் தங்களுக்கு ஆபத்து வராது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

10,000 நாய்கள்

10,000 நாய்கள்

இந்த திருவிழா காலத்தில் சுமார் 10,000-க்கும் அதிகமான நாய்கள் கொல்லப்படும். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருவிழாவுக்கு எதிர்ப்பு

திருவிழாவுக்கு எதிர்ப்பு

சமூகவலைதளங்களில் யூலின் நாய்க்கறி திருவிழாவுக்கான பிரசாரமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான நாய்கள் மீட்கப்பட்டும் உள்ளன.

10 நாட்கள் திருவிழா

10 நாட்கள் திருவிழா

இதனையும் மீறி யூலின் நகரில் வெகுவிமரிசையாக நாய்க்கறி திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த நாய்கறி திருவிழா நடைபெறும்.

நம்ம நாகாலாந்தில்..

அண்மையில் நமது நாட்டில் இறைச்சிக்காக அஸ்ஸாமில் இருந்து நாகலாந்துக்கு நாய்கள் கடத்திச் செல்லப்பட்டு பிடிபட்டது. நாகாலாந்தில் நாய்கறிதான் உயர்ந்த அசைவ உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A most controversial dog meat festival in China opened on yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X