அருணாச்சலப் பிரதேசத்தை காட்டி.. உள்ளடி வேலை பார்க்கும் டிரம்ப்! பென்டகன் டம்மி.. சீனா விளாசல்
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றுவதன் மூலம், சீனா வல்லரசாக உருவாக முயற்சிக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா, பென்டகன் டம்மி பீசு! இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையை அமெரிக்கா தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று கூறியிருக்கிறது.
பென்டகன் அறிக்கை பிளவுகளை உருவாக்குவதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும் சீனா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என சீனா விளக்கமளித்துள்ளது.

சீனா எதிர்ப்பு
அமெரிக்க-இந்தியா உறவுகளை பலவீனப்படுத்தவும், பாகிஸ்தானுடன் பாதுகாப்புத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் சீனா முயன்று வருகிறது என்று பென்டகன் அறிக்கை குற்றசம்சாட்டியிருந்தது. ஆனால் இந்த அறிக்கை ஒருதலைபட்சமானது, பொறுப்பற்றது என சீனா விமர்சித்திருக்கிறது. சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லி ஜிங்லியன், பென்டகன் அறிக்கை குறித்து கூறுகையில்,
நாட்டாண்மை தனம்
"எங்களுக்கு என பாதுகாப்பு கொள்கைகள் இருக்கின்றன. இதனை அமெரிக்கா சிதைக்கிறது. சீனாவுக்கும் இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு இடையில் மோதலை தூண்டி விடுகிறது. அமெரிக்கா நாட்டாண்மை தன்மை செய்வது எல்லோருக்கும் தெரியும். இந்த நாட்டாண்மை தனத்தை தக்க வைத்துக் கொள்ள, அதை மெயின்டெய்ன் செய்ய இப்படியான கதைகளை அவிழ்த்து விடுகிறது.
இந்தியா-சீனா
அருணாச்சலப் பிரதேசம் விவகாரத்தில், தனித்துவமான நிலைப்பாட்டை நாங்கள் கையாள்கிறோம். நீண்ட காலம் இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் இதை செய்கிறோம். தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைச் சரியான முறையில் கையாளவும், வலுவான மற்றும் நிலையான இருதரப்பு உறவை மேம்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியா-சீனாவை பொறுத்தவரை எல்லைப்பிரச்சனை இருநாடுகளுக்கும் நிலையானதாக இருக்கிறது. இதற்கு இரு நாடுகளும் சேர்ந்து தீர்வு கண்டு வருகிறோம்.
பாக்.,-சீனா
பாகிஸ்தான் விவகாரங்களை பொறுத்தவரை, பாகிஸ்தானுடன் சீனா இராணுவத் தளத்தை நிறுவுவதைக் கருத்தில் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் சீனா-பாக்., இடையே கூட்டணி இருப்பதாக பென்டகன் கூறுகிறது. விஷயம் என்னவெனில், எங்கள் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா அதிகமாக தலையீடு செய்கிறது. எங்களுடைய நடவடிக்கைகளை தவறாக சித்தரிக்கிறது. சீனாவின் இராணுவ வளர்ச்சி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. சீன இராணுவத்தின் இயல்பான நடவடிக்கைகளுக்கு அவதூறு பரப்பியுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
சீனாவை பற்றி அமெரிக்கா குற்றம் சொல்வதற்கு தகுதியான நாடே கிடையாது. உலகின் மிக கொடூரமான போர்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல், லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இந்த போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நாடு, சீனாவிடம் எல்லாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்வது வேடிக்கையானது. ஆட்டுக்குட்டிக்காக ஓநாய் கண்ணீர் வடிப்பதை போன்று இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications