கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா!
பெய்ஜிங்: ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஹர்முஸ் நீரிணை மொத்தமாக மூடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொஞ்சம் கூட பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்று சீனா கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட கதைதான், அமெரிக்கா-ஈரான் போர். இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், இஸ்லாமாபாத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை மொத்த உலகத்திற்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் நடவடிக்கை
பேச்சுவார்த்தைதான் சொதப்பிவிட்டதே, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடந்த என்ன செய்வது என்று யோசிக்காமல், ஈரானின் துறைமுகங்களை முடக்கியிருக்கிறது அமெரிக்கா. ஹார்முஸ் நீரிணைக்குள் வரும் கப்பல்களையும், வெளியே செல்லும் கப்பல்களையும் தாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நீரிணை வழியாகத்தான், சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த போக்குவாரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
சீனாவின் கண்டனம்
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் செயல் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் சீனா தொடர்ந்து செயல்படும் என்றும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்தார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இது பற்றி பேசுகையில், "அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையும், அதன் முற்றுகையும் பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். இது போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகவும், ஹர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும் அமையும். இது ஒரு ஆபத்தான, பொறுப்பற்ற செயல்" என்று கூறியிருக்கிறார்.
சீனா மீது அழுத்தம்
இதற்கிடையில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. சீனா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அங்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. ஆய்வாளர்களின் கருத்துப்படி, டிரம்பின் இந்த நடவடிக்கை ஈரானை நிதி ரீதியாக பலவீனப்படுத்தி, ஜலசந்தியை மீண்டும் திறக்க சீனா மீது அழுத்தம் கொடுக்கக்கூடும்.
கறார் காட்டிய சீனா
இந்த போர் குறித்து முதன்முறையாகப் பேசிய ஜி ஜின்பிங், மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பெய்ஜிங்கில் வைத்து அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்த ஜி ஜின்பிங், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சீனா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என உறுதி அளித்தார்.
அதேபோல, ஈரானுக்கு ஆயுதங்களை கொடுப்பதாக சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை வைத்திருந்தது. இதை மறுத்த சீனா, இப்படியான புகார்கள் ஆதாரம் இல்லாதது என்றும் கூறியிருக்கிறார். இதை சாக்காக சொல்லிக்கொண்டு எங்கள் மீது வரியை போட்டால், பதிலுக்கு நாங்களும் வரி போடுவோம் என்று கறார் காட்டியிருக்கிறார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications