இந்தியாவுக்கு பேராபத்து.. எல்லையில் ரூ.14.46 லட்சம் கோடியில் அணை கட்டும் சீனா.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சீன பிரதமர் லி கியாங் பங்கேற்ற நிலையில் இந்த அணை கட்டினால் நம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சமீபகாலமாக எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இருநாடுகள் இடையேயான உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சீனா தற்போது பெரிய சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதுதான் எல்லையில் அணை கட்டும் திட்டம்.

china brahmaputra yarlung tsangpo dam

தென்கிழக்கு திபெத்தில் கைலாய மலையில் பிறக்கும் பிரம்மபுத்திரா நதி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நதி சீனாவில் ‛யார்லங் சாங்கோ' எனவும், நம் நாட்டில் பிரம்மபுத்திரா எனவும், வங்கதேசத்தில் ஜமுனா நதி எனவும் அழைக்கப்படுகிறது. திபெத்தில் பிறந்து சீனா, இந்தியா, வங்கதேசத்தை வளமாக்கி இந்த நதி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்று. மொத்தம் 2,900 கிலோமீட்டர் வரை இந்த நதி ஓடுகிறது. இந்நிலையில் தான் சீனா தனது வேலையை காட்ட தொடங்கி உள்ளது. சீனா நம் நாட்டின் எல்லையின் அருகே அருணாச்சல பிரதேசத்தின் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் பிரமாண்ட அணையை கட்ட திட்டமிட்டுளளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி நேற்று நடந்தது. இந்த பூமிபூஜையில் சீனாவின் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.

இந்த அணை கட்டும் திட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் சீனா ஒப்புதல் வழங்கியது. இந்த அணையின் பட்ஜெட் 1.2 டிரில்லியன் யுவான். டாலரில் கூற வேண்டும் என்றால் .167 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடியாகும். இவ்வளவு மதிப்பில் இந்த அணையை நீர்மின் திட்டத்துக்காக சீனா கட்ட உள்ளது. இங்கு மொத்தம் 5 நீர்மின் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த அணை கட்டி முடிக்கும்போது யாங்சே நதியில் உள்ள 3 கோர்ஜஸ் அணையை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளது.

இந்த அணையின் காரணமாக நதியின் நீரோட்டம் தடுத்து நிறுத்தப்படும். இது நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலமாக பிரம்மபுத்திராவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காது. அதேவேளையில் கனமழை பெய்யும்போது சீனா அதிகமான தண்ணீரை அணையில் இருந்து திடீரென திறந்து விடலாம். இது நம் நாட்டில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தலாம்.

இதனால் நம் நாடு இந்த அணைக்கட்டும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஜனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் கடைநிலை பகுதிகள் பாதிக்கப்படும். அந்த பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதற்கு சீனா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு கூட அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அச்சம் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை மிகவும் தீவிரமானது. தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்தலாம்.

இந்த அணை கட்டுமான பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். அணை கட்டும் பணி முடிந்தால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்" என்று அச்சம் தெரிவித்து இருந்தார். இவர் அச்சம் தெரிவித்த அடுத்த சில நாட்களிலேய இப்போது சீனா அணை கட்ட தொடங்கி உள்ளது.

இதனால் நம் நாடு சுதாரிக்க வேண்டும். அதேவேளையில் சீனாவின் இந்த அணையின் காரணமாக நம் நாடு மட்டுமின்றி வங்கதேசமும் பாதிக்கப்படும். பிரம்மபுத்திரா அணை வங்கதேசம் வழியாக தான் வங்கக்கடலில் கலக்கிறது. இதனால் நம்முடன் சேர்ந்து வங்கதேசத்துக்கும் சிக்கல் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+