ஆடாத ஆட்டம் போடும் டிரம்ப்.. அமெரிக்காவின் வரி விவகாரத்தை எப்படி சமாளிக்கிறது சீனா? விஷயம் இதுதான்
பெய்ஜிங்: அமெரிக்காவின் வரி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், சீனா இந்த விஷயத்தில் கூலாக இருக்கிறது. சீனா அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
இரண்டு விஷயங்களை சீனா கையில் எடுத்திருக்கிறது. இதை வைத்துதான் அமெரிக்காவின் ஆட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

1. கடன் பத்திரங்கள்
2. ஆசிய நாடுகளிடம் வணிகம்
கடன் பத்திரங்கள்
அமெரிக்கா என்னதான் 'பெத்த கை' ஆக இருந்தாலும், அது கடனாளி நாடுதான். சொந்த நாட்டின் தேவைகளை சரிகட்ட சர்வதேச அளவில் கடன் வாங்கி வருகிறது. இதற்காக ஒரு பத்திரம் இருக்கிறது. அதாவது நான் உங்களிடம் இவ்வளவு தொகை கடன் வாங்குகிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு வட்டியுடன் திருப்பி தருகிறேன் என்று அந்த பத்திர்த்தில் குறிப்பிட்டிருக்கும். உலகின் மிகவும் நம்பகமான கடன் பத்திரம் இதுதான். கடந்த 2023ம் ஆண்டு மட்டும் அமெரிக்கா $3.5 டிரில்லியன் அளவுக்கு கடன் பத்திரம் மூலம் கடன் வாங்கியிருக்கிறது.
கடன் கொடுக்கும் சீனா
சரி இந்த பத்திரங்களை யார் வாங்குகிறார்கள்? அமெரிக்காவுக்கு யார் கடன் கொடுக்கிறரார்கள்? என்கிற கேள்வி எழலாம். ஜப்பானும் சீனாவும்தான் அமெரிக்காவுக்கு கடன் கொடுக்கின்றன. ஜப்பான் $1,125.9 பில்லியன் மதிப்பிலான கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. சீனா, $784.3 பில்லியன் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறது. இப்போது விஷயம் என்னவெனில் தன் வசம் இருக்கும் பத்திரங்களை சீனா விற்று வருகிறது.
கடனை திரும்ப கேட்கும் சீனா
"இந்தா நீ கொடுத்த பத்திரம்.. என்கிட்ட வாங்கின காசை கொடு" என சீனா கேட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இந்த நெருக்கடி, சீனாவை சீண்ட விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
திவாலாகும் அமெரிக்கா
அதேபோல அமெரிக்காவுக்கு இன்னும் அதிகமாக பணம் தேவை. எனவே மேலும் அதிகமாக கடன் பத்திரங்களை விற்கிறது. இதனை ஜப்பானால் வாங்க முடியாது. ஏனெனில் அது ஏற்கெனவே நிறைய வாங்கியிருக்கிறது. இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் சீனாதான். ஆனால், சீனா இதனை வாங்க மறுத்து வருகிறது. எனவே அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக திவாலாகிக்கொண்டிருக்கிறது. இப்படியாக அமெரிக்காவை சீனா எதிர்கொண்டு வருகிறது.
ஆசிய நாடுகளில் முதலீடு
இரண்டாவது விஷயத்தை பற்றி அலசுவோம். ஆசிய நாடுகளுடன் வர்த்தகம். ஏற்கெனவே அமெரிக்காவுடன்தான் சீனா அதிக வர்த்தகத்தை மேற்கொண்டு வந்திருந்தது. ஆனால், வரி காரணமாக இந்த வணிகம் தடைப்பட்டிருக்கிறது. எனவே மாற்றாக ஆசிய நாடுகளை சீனா நாட தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது.
அரிய கனிமங்கள்
மட்டுமல்லாது அரிய கனிமங்களில் 92% சீனாவில்தான் கிடைக்கின்றன. சீனாவில்தான் கிடைக்கின்றன என்பதைவிட, இதன் சப்ளையை 92% சீனாதான் கட்டுப்படுத்துகிறது என சொல்வதே பொறுத்தமாக இருக்கும். இந்த கனிமங்கள் அமெரிக்காவுக்கு மிக அவசியமானதாகும். இப்படி இருக்கையில், சீனா இதனை கட்டுப்படுத்தி கேம் விளையாடுகிறது. எனவே அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த கனிமங்களை அமெரிக்கா சொந்தமாக வெட்டி எடுக்க இன்று முயற்சிகளை தொடங்கினால் கூட அது சாத்தியமாவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். எனவேதான் அமெரிக்கா செய்வது அறியாது முழித்து வருகிறது. இந்த விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்டில் சொல்லுங்கள்.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications