For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாசலப்பிரதேசத்தில் சீனா அட்டூழியம்.. 2வது கிராமத்தை கட்டிய பிஎல்ஏ ராணுவம்.. சாட்டிலைட் போட்டோஸ்!

Google Oneindia Tamil News

இட்டா நகர்: அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வருடம் சீனாவின் கிராமம் ஒன்று இங்கு கண்டிபிடிக்கப்பட்டது.

60 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை சீனா அருணாசலப்பிரதேசத்தில் கட்டி உள்ளது. 2019ல் இங்கு இல்லாத கிராமம் 2 வருடங்களில் சீனா மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல் அருணாசலப்பிரதேசத்தில் எல்லைக்கு அருகே கிராமம் ஒன்றை சீனா கட்டியது.

அந்த கிராமத்தில் இருந்து 93 கிமீ தூரத்தில் இரண்டாவது கிராமத்தை சீனா கட்டி இருப்பதாக சாட்டிலைட் விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்

எங்கே?

எங்கே?

ஆங்கில ஊடகமான என்டிடிவி இந்த செய்தியை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய கிராமம் இந்தியாவின் எல்லைக்கு 6 கிமீ உள்ளே கட்டப்பட்டு உள்ளது. முன்னதாக முதல் கிராமம் குறித்த செய்தி கடந்த வருடம் வெளியானது. இதை சில நாட்களுக்கு முன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்தது.

இரண்டாவது கிராமம்

இரண்டாவது கிராமம்

தற்போது இரண்டாவது கிராமம் கட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா முறைகேடாக ஆக்கிரமித்த நிலங்களில் இந்த கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகளை சீனா கட்டி இருக்கிறது. கட்டுப்பாட்டு பகுதிக்கும் சர்வதேச எல்லைக்கும் இடையில் இருக்கும் இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில் சீனா இதை கட்டி உள்ளது.

 மக்கள் இருக்கிறார்களா?

மக்கள் இருக்கிறார்களா?

ஆனால் இந்த கட்டுமானத்திற்கு உள்ளே சீன மக்கள், ராணுவத்தினர் இருக்கிறார்களா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் , Maxar Technologies and Planet Labs நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் ஷி யோமி கிராமம் ஆகும். இந்தியாவிற்கு கீழ் வரும் கிராமம் ஆகும்.

மேப்

மேப்

அதேபோல் இந்த கட்டிடம் ஒன்றில் உச்ச மாடியில் பெரிய அளவில் சீன கொடி வரையப்பட்டு இருக்கிறது. வானத்தில் இருந்து பார்த்தால் சீன கொடியை பார்க்கும் வகையில் வரையப்பட்டு உள்ளது. அதேபோல் டிஜிட்டல் மேப் சர்வே, ஜியோ லொகேஷன் சர்வே ஆகியவையும் இந்த பகுதி இந்தியாவிற்கு கீழ் வருவதை உறுதி செய்து உள்ளது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.

Recommended Video

    Manipur-ல் Indian Soldiers குடும்பத்துடன் கொல்லப்பட்டதன் பின்னணியில் China & Myanmar?
     விளக்கம்

    விளக்கம்

    சீனாவிற்கு கீழ் வரும் வடக்கு கட்டுப்பாட்டு பகுதியில் இந்த இடம் வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பகுதி சர்வதேச எல்லைக்கும் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையில் வருவதால் கண்டிப்பாக அது இந்தியாவிற்கு சொந்தமான இடம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அருணாசலப்பிரதேச அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China PLA troops entered Arunachal Pradesh and built one more village: Satelite photos reveal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X