அமெரிக்காவுக்கு செக்! அணு ஆயுத ஏவுகணையை ரெடி செய்தது சீனா! 12,000 கி.மீ வரை அச்சு பிசகாமல் அடிக்கும்
பெய்ஜிங்: அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை பொதுவாக சீனா மறைத்துதான் வைத்திருக்கும். ஆனால், முதன் முறையாக தற்போது தன்னுடைய சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது. இது 12,000 கி.மீ வரை சென்று துல்லியமாக இலக்கை தாக்கும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தூரம் இதைவிட குறைவு என்பதால், அமெரிக்கா சற்றே பதற்றமடைந்திருக்கிறது.
ஆயுத மோதலை சீனா இதுநாள் வரை விரும்பியதில்லை. பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு சண்டை செய்து வந்த இந்த நாட்டை, அமெரிக்கா இப்போது ஆயுத களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது.
சீனாவின் அணு ஆயுதம் குறித்து அந்நாட்டின் செய்தி ஊடகமான சிஜிடிஎன், வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில், இந்த அணு ஆயுதத்தின் பெயர் 'டிஎஃப்-5' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையை சேர்ந்த ஏவுகணையாகும். இதை ஏன் சீனா பகிரங்கமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதற்கு பதிலளித்துள்ள சர்வதேச அரசியல் விமர்சகர்கள், சமீபத்தில் சிங்கப்பூரில் 'ஷாங்க்ரி-லா' பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், சீனாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் இந்த பேச்சுவார்த்தையில் பேசியதாவது,
"தைவானை சீனா ஆக்கிரமிக்க ரெடியாகி வருகிறது. தைவானுக்கு அருகில் உள்ள அனைத்து தீவுகளிலும் ராணுவ தளவாடங்களை சீனா குவித்து வருகிறது. எனவே, சீனாவுக்கு பதிலளிக் அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் ஆசிய நாடுகள் தயாராக வேண்டும்" என்று பேசியிருந்தார். இவரது விரிவான உரையில் சீனாவின் பெயரை 20 முறை குறிப்பிட்டு எச்சரித்திருந்தார். இவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது சக்திவாய்ந்த ஏவுகணையை வெளி உலகத்திற்கு காட்டியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
என்னதான் இந்த ஏவுகணை அமெரிக்கா தூரத்திற்கு பறக்கும் என்றாலும், ஆசியாவில் அமெரிக்கா சுமார் 41 ராணுவ முகாம்களை கொண்டிருக்கிறது. இதுவே சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்.

- ஜப்பானில் - 14
- பிலிப்பைன்ஸில் - 9
- தென் கொரியாவில் - 8
- ஆஸ்திரேலியா, பபுவா நியூ கியானா - 10
என அமெரிக்கா ராணுவ தங்களை கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவுடன் மறைமுகமாக மோதி வந்த அமெரிக்கா, 2 ஆண்டுகளாக தைவான் விஷயத்தின் மூலம் நேரடி மோதலுக்கு ரெடியாகி வருகிறது. தைவான் தனி நாடு என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அது சீனாவின் ஒரு பகுதிதான் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதை வைத்து ஆசியாவில் சீனாவின் பலத்தை பரிசோதித்து பார்க்க சீனா ரெடியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications