"உக்ரைன் மாடல்".. ரஷ்யா ஸ்டைலில் பட்டென களத்தில் குதித்த சீனா? மேற்கு உலகம் அஞ்சியது போலவே நடக்குதே!
பெய்ஜிங்: உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் சீனா தைவானில் போர் தொடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேற்கு உலக நாடுகள் இது பயந்தது போலவே சீனா தற்போது முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
Recommended Video
உக்ரைனுக்கு எப்படி ரஷ்யாவோ அப்படித்தான் தைவானுக்கு சீனா. உக்ரைன் - ரஷ்யா இரண்டும் சோவியத் யூனியன் காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகள். சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனி நாடாக பிரிந்தது.
இந்த நிலையில் சமீப நாட்களில் நேட்டோ உடனும், ஐரோப்பா உடனும் உக்ரைன் நெருக்கம் காட்டி வந்ததால் பாதுகாப்பு கருதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி உள்ளது. இதே விவகாரம்தான் தைவானிலும் நடந்து வருகிறது.

சீனா தைவான்
சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவான் நாட்டை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் தனி நாடு கிடையாது. தைவான் எங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இதை தைவான் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. சீனாவின் கீழ் நாங்கள் வரவில்லை. நாங்கள் எப்போதும் சுதந்திரமான தனி நாடு என்று தைவான் கூறி வருகிறது.

தைவான் பிரிவினை
1949ல் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின் தைவான் - சீனா இரண்டாக பிரிந்துவிட்டது. இந்த நிலையில்தான் தைவானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது உக்ரைனில் ரஷ்யா படையெடுத்துள்ளது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் ரஷ்யாவிற்கு எதிராக வேறு பெரிய நடவடிக்கை எதையும் மேற்கு உலகம் செய்ய முடியவில்லை.

சீனா ரஷ்யா
இதை பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவை போலவே சீனாவும் தைவான் மீது படையெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தைவானில் கடந்த வெள்ளிக்கிழமை பேசினார். அதில் தைவானை அமெரிக்கா தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்.

சீன பிரதமர்
இதை தொடர்ந்தே தற்போது சீனா தைவான் விவகாரத்தில் தீவிரம் காட்டி உள்ளது. இது தொடர்பாக தற்போது சீனாவின் பிரதமர் லி கேக்யாங் நாடாளுமன்றத்தில் பேசிய போது, தைவானில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அங்கு அமைதியான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். சீனாவுடன் தைவானை மீண்டும் இணைக்க வேண்டும். தைவான் விவகாரத்தில் வெளிநாடுகள், அந்நிய சக்திகள் தலையிட கூடாது.

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
தைவான் அரசு மீண்டும் ஒன்றுபட்ட சீனாவை உருவாக்க முன் வர வேண்டும். ஒன்றுபட்ட, ஒரே சீனா என்பதே எங்கள் குறிக்கோள். வெளிநாட்டு தலையீடுகளை தைவான் அரசு அங்கீகரிக்க கூடாது. மாறாக தங்கள் பொதுமக்கள் கூறுவதை அவர்கள் கேட்க வேண்டும். தைவான் மக்கள் ஒன்றுபட்ட சீனாவே ஒரே குறிக்கோள் என்று இருக்கிறார்கள் என்று சீன பிரதமர் கூறியுள்ளார்.

உக்ரைன் போர்
உக்ரைன் போரை காரணம் காட்டி தைவானை சீனா பிடிக்க முயலும் என்று தகவல்கள் வந்த நிலையில் சீன பிரதமர் இப்படி பேசி இருக்கிறார். மேற்கு உலக நாடுகளின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் சீனா இப்படி பேசி உள்ளது. தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. ஆயுதங்களை வழங்கி வருகிறது. அங்கு இருக்கும் அரசும் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசு.

ரஷ்யா உக்ரைன் மாடல்
தைவான் அதிபர் ட்சாய் இங் வேன் அமெரிக்காவிற்கு ஆதரவான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து சீனாவை எதிர்த்து வருகிறார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலவேதான் இவரும். இந்த நிலையில்தான் உக்ரைனில் ரஷ்யா செய்தது போலவே தைவானில் சீனா போர் தொடுக்க முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி போர் ஏற்பட்டால் ரஷ்யா சீனாவிற்கு ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications