ஒரே ஒரு பார்! ஒட்டுமொத்த நகருக்கும் ஊரடங்கு! சம்பவம் செய்த குடிமக்கள்! சீனாவுக்கு விழுந்த அடி
பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு சில காலமாகக் குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு திடீரென சில பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது உலகெங்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் எதுவும் தப்பவில்லை.
கடைசியில் பரவிய ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. சில மாதங்களாகத் தான் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது.

கொரோனா வைரஸ்
இந்தச் சூழலில் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியதோ அந்த சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெய்ஜிங்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மக்களுக்கு டெஸ்டிக் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் உடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இதன் காரணமாகவே வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்தாலும் கூட பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. 140 கோடி மக்கள்தொகையை கொண்ட சீனாவில் இதுவரை 5,226 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இருப்பினும், சீனா இன்னும் ஜீரோ கோவிட் கொள்கையையே பின்பற்றி வருகிறது.

பெய்ஜிங்
பெய்ஜிங்கில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க ஹெவன் சூப்பர்மார்க்கெட் பார் தான் முக்கிய காரணம். பெய்ஜிங் நகரத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட 61 புதிய கேஸ்களும் அந்த குறிப்பிட்ட மதுக்கடைக்குச் சென்றதாலேயே ஏற்பட்டது. அந்த குறிப்பிட்ட பாருக்கு அதிகளவில் மக்கள் சென்று திரும்பியதால் கேஸ்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இப்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் கட்டுப்பாடுகள்
அந்த குறிப்பிட்ட பாரில் இருந்து 115 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 6158 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், சீனா கொரோனா கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்தி இருந்தது. இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஷாங்காய்
ஷாங்காய் நகரிலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள அனைவருக்கும் கொரோனா டெஸ்டிங் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அங்குள்ள 2.5 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பும் அங்கு அதிகரித்து வருவது ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications