மூக்கில் தண்ணீரை உறிஞ்சி கண்ணில் வெளியே தள்ளும் குங்பூ மாஸ்டர்.. வைரலாகும் வீடியோ!
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த குங்பூ மாஸ்டர் செய்யும் சாகச வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் குங்பூ மாஸ்டர் சாங் யிலாங். இவர் அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர். அதற்கு காரணம் அவர் செய்யும் சாகசங்கள் தான்.
சமீபத்தில் அவர் செய்த ஒரு சாகச வீடியோ வைரலாகி, அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டது.
அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என யோசிக்கிறீர்களா? உண்மையிலேயே மற்றவர்கள் எளிதில் செய்ய முடியாத காரியத்தை தான் யிலாங் செய்துள்ளார்.
தனது மூக்கில் தண்ணீரை இழுத்து, கண்கள் வழியாக வெளியே தள்ளி, செடிக்கு நீர் பாய்ச்சிகிறார் யிலாங்.

செடிக்கு தண்ணீர்:
முதலில் மூக்கில் தண்ணீரை இழுத்து, கண்கள் வழியாக ரோஜா செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். பின்னர் இரண்டாவதாக, கண்களின் வழியாக தண்ணீரை தெளித்து, ஒரு பேர்பரில் சீன எழுத்துகளை எழுதுகிறார்.

வித்தையின் ரகசியம்:
இது வித்தை எப்படி சாத்தியமாகிறது எனில், முதலில் மூக்கின் வழியாக தண்ணீரை மேலே இழுத்து, பின்னர் அதனை கண்களுக்கு செல்லும் குழாயில் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் கண்களின் வழியாக அந்த நீர் வெளியேறும்.

எளிதல்ல:
வாய் வார்த்தையாக சொல்லும் போது, இது ஏதோ சுலபலான காரியமாக தான் தோன்றும். ஆனால் யிலாங்கின் இந்த சாகசம் ஓரிரு நாளில் சாத்தியமானது இல்லை. ஆண்டு கணக்காக பயிற்சி செய்து இதனை அவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.
வைரல் வீடியோ:
"இந்த வித்தையை சரியாக செய்ய நான் பத்தாண்டுகளுக்கு மேல் பயிற்சி எடுத்து வருகிறேன். எனவே இதனை யாரும் வீட்டில் செய்து பார்க்க வேண்டாம். குறிப்பாக குழந்தைகள். ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது", என எச்சரிக்கிறார் யிலாங். யிலாங்கின் இந்த கண்கட்டி வித்தை தான் இணையத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications