ஆபத்துடன் விளையாடும் சீன ஆய்வாளர்கள்.. "100% உயிரிழப்பு நிச்சயம்.." பகீர் கிளப்பும் புது வகை கொரோனா!
பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு இப்போது தான் முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதற்குள்ள சீன ஆய்வாளர்கள் மற்றொரு வகை வைரஸ் வைத்து ஆய்வுகளை ஆரம்பித்துவிட்டனர். அது குறித்து நாம் பார்க்கலாம்.
சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

அதன் பிறகு வேக்சின் தொடங்கி நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது கொரோனா கட்டுக்குள் வந்தது. இதற்கிடையே சீன ஆய்வாளர்கள் நடத்தும் மற்றொரு ஆய்வு குறித்து மற்றொரு பகீர் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ்: அதாவது சீன ஆய்வாளர்கள் GX_P2V என்ற ஒரு வகை பிறழ்வு கொரோனா வைரஸை உருவாக்கி வருகிறார்களாம். அது நேரடியாகச் சென்று மூளையைத் தாக்கும் ஆபத்து இருக்கிறதாகவும் எச்சரிக்கிறார்கள். இது அடுத்த கொரோனா அலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்த வகை கொரோனா வேரியண்ட் எலிகளை 100% வரை கொல்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சீன ராணுவத்திற்குச் சொந்தமான ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொரோனா வைரசை குளோனிங் செய்து, அதை எலிகளுக்குச் செலுத்தி உள்ளனர். இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படும் அனைத்து எலிகளும் எட்டு நாட்களுக்குள் உயிரிழந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது விரைவான மரணத்தை ஏற்படுத்தும் நிலையில், இது அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
எலிகள்: மனிதர்களிடம் காணப்படும் புரதத்தை எலிகள் வெளிப்படுத்தியதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை கொரோனா மக்களிடையே பரவினால் அது எப்படிச் செயல்படும் என்ற ஒரு யோசனையை இது ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த 'GX_P2V மனிதர்களுக்குள் பரவினால் எந்தளவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுவதாக உள்ளது.
உயிரிழந்த எலிகளைச் சோதனை செய்ததில் அதன் மூளை மற்றும் கண்களில் அதிக அளவு வைரஸ் லோட் இருப்பதையும் குழு கண்டறிந்தது. கொரோனா போல இல்லாமல் இந்த வைரஸ் பாதிப்பு உடலில் படுவேகமாக பரவுவதையே இது காட்டுகிறது.
தேவையே இல்லாத ஒன்று: இது குறித்து லண்டனைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "இது ஒரு பயங்கரமான ஆய்வு,. அறிவியல் ரீதியாக எதற்காக இந்த ஆய்வை செய்கிறார்கள் என்றே புரியவில்லை. இது அர்த்தமற்றது. எலிகளைப் பிடித்து சம்பந்தமே இல்லாத ஒரு வைரஸை எதற்காகப் போட்டு சோதனை செய்கிறார்கள் என்று புரியவில்லை. எதாவது சின்ன தவறு நடந்தாலும் கூட பேரழிவை இது ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் எப்ரைட், "இந்த ஆய்வில் பின்பற்றப்பட்ட பயோ பாதுகாப்பு குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இது பல கவலைகளை ஏற்படுத்துகிறது. கடந்த 2019 காலகட்டத்தில் இதேபோல ஆய்வை நடத்தி, கொரோனா பரவியிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. ஆராய்ச்சிக்கு அவசியமான குறைந்தபட்ச பயோ பாதுகாப்பு இல்லாமல் நடத்தப்பட்டது பொறுப்பு இல்லாத செயல்" என்று சாடியுள்ளார்.
அதேநேரம் இது புத வகை வைரஸ் எதுவும் இல்லை என்று சொல்லும் பெய்ஜிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மலேசியாவில் கடந்த 2017இல் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இது என்றும் அதை மட்டுமே தாங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications