கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரருக்கு.. நூற்றாண்டின் சிறந்த வீரர் விருது.. சீன ராணுவம் அறிவிப்பு
பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரர், நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.
குறிப்பாக, கடந்த ஜூன் மதம் 16ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.

நூற்றாண்டின் சிறந்த வீரர்
கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தியா தனது 20 வீரர்களை இழந்திருந்தது. அதேபோல சீனா ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட நான்கு சீன ராணுவ வீரர்களில் ஒருவரான தளபதி சென் ஹோங்ஜுன் (30) என்பவர், அந்நாட்டின் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

குளோபல் டைமஸ்
அவருடன் சேர்ந்து மொத்தம் 29 வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோல் டைமஸ் வெளியிட்ட செய்தியில், "சென் ஹோங்ஜுன் 10 ஆண்டுகளாக எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை காரணமாகச் சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உயிரிழந்தார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 பேர் பரிந்துரை
இந்தியா ராணுவம் ஒருபோதும் எல்லையைத் தாண்டி சென்று பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இந்திய ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விருதுக்கு மொத்தம் 29 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், ஜூன் 4 ஆம் தேதி வரை இந்த பட்டியல் தொடர்பாகப் பொதுமக்கள் கருத்துகள் கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறந்த விளங்கிய வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கவுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications