Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலியின் சிறுநீரை மருந்தாக விற்பனை செய்யும் சீன விலங்கியல் பூங்கா! ஒயினில் கலந்து குடிக்கனுமாம்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: புலியின் சிறுநீரை பாட்டிலில் அடைத்து சீன விலங்கியல் பூங்கா ஒன்று விற்பனை செய்து வருகிறது. இந்திய மதிப்பில் ரூ.560 க்கும் மேல் விற்பனை செய்யப்படும் இந்த புலியின் சிறுநீரை பருகினால் முடக்கு வாதம், தசை வலி போன்றவை குணமாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீன விலங்கியல் பூங்காவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

சீன மக்களிடையே பல விசித்திரமான பழக்க வழக்கங்கள் உள்ளன. கலாசாரம் மட்டும் இன்றி அவர்களின் உணவு பழக்க வழக்கம் கூட புதிதாக வெளியில் சென்றவர்களை குமட்ட வைத்துவிடும் அளவுக்கு இருக்கும். அதாவது, சீனாவில் தவளை, பாம்பு , பல்லி உள்ளிட்டவற்றை கூட விரும்பி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அது மட்டும் இன்றி சிறுநீரில் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது போன்ற பல வினோத பழக்கங்களையும் சீனர்கள் பின்பற்றுகிறார்கள்.

china tiger food

புலியின் சிறுநீர்

இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும். தற்போது சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். சைபிரியன் வகை புலியின் சிறுநீரை குடித்தால் முடக்குவாதம் போன்ற நோய்கள் குணமாகும் என்றும் வெள்ளை ஒயினுடன் இதை கலந்து குடிக்க வேண்டும் என்று யான் பிஃபெங்சியா என்ற வனவிலங்கு பூங்கா வைத்துள்ள விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலர்ஜி ஏற்பட்டால்

250 கிராம் அளவு கொண்ட பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 560 க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறதாம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் இந்த வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா வெளியிட்டுள்ள விளம்பரத்தில், புலியின் சிறுநீர் கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ முடக்கு வாதம், தசை வலி, சுளுக்கு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் எண்று கூறப்பட்டுள்ளது.

புலியின் சிறுநீர் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாட்டிலில், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளது. அதில், புலியின் சிறுநீரை வெள்ளை ஒயினில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி துண்டுகளை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். அல்லது வாய்வழியாக குடிக்கவும் செய்யலாம். ஒருவேளை அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

சிறுநீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

புலியிடம் இருந்து சிறுநீரை எவ்வாறு கலெக்ட் செய்கிறோம் என்பது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, பூங்காவில் பல்வேறு இடங்களிலும் பேசின்கள் வைக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் புலிகள் சிறுநீர் கழித்தால் உடனடியாக ஊழியர்கள் எடுத்து வந்து விடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த சிறுநீர் அப்படியே விற்பனை செய்யப்படுகிறதா? அல்லது எதுவும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்ற விவரம் இல்லை.

அதே நேரத்தில் சீனாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள், புலியின் சிறுநீர் நோயை குணப்படுத்தும் என்ற வாதத்தை நிராகரித்துள்ளனர். அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும், புலியின் சிறுநீரை மருத்துவப் பொருளாக பயன்படுத்த எந்த அங்கீகாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை

அதேவேளையில், சீனாவில் பலரும் புலியின் சிறுநீரை மருந்தாக வாங்கி பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சீனாவின் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஒரு ஆர்வத்தில் இந்த மருந்தை எனது தந்தைக்காக வாங்கினேன். எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு

சீனாவில் புலிகளின் எலும்புகள் உள்ளிட்டவற்றை மருத்துவத்திற்காக பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாம். எனினும், புலிகளை வேட்டையாடுவது அதிகரித்ததால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் புலிகளை வேட்டையாடினால் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. சீனாவில் புலிகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புலிகளின் சிறுநீர் விற்பனை போன்ற செயல்கள், காப்பாற்றும் முயற்சியை சிறுமைப்படுத்தும் வகையில் அமையும் என வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+