"சவுகிதார்!" பாகிஸ்தானில் திடீரென எழுந்த கோஷம்! ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் மக்கள்.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அங்கு அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கவே அனைவரும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பினர்.

அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பினர்.

 பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம்


இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார். இருப்பினும், இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகின. நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த சனிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.

 இம்ரான் கான் குற்றச்சாட்டு

இம்ரான் கான் குற்றச்சாட்டு


இருப்பினும், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய நாட்டுச் சதி இருப்பதாகச் சாடிய இம்ரான் கான், பாக். ஜனநாயகத்தைக் காக்கப் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இம்ரான் கானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றிரவு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தலைமையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

 சவுகிதார்

சவுகிதார்


அந்த கூட்டத்தில் ஷேக் ரஷீத் அகமது பேசிக் கொண்டு இருக்கும் போது, திடீரென கூட்டத்தில் ஒரு பகுதியினர் "சவுகிதார் சோர் ஹை' (காவலரே ஒரு திருடன்) என்று முழக்கமிடத் தொடங்கினர். நன்றாகச் சென்று கொண்டிருந்த இம்ரான் கானின் ஆட்சியை பாக். ராணுவம் திருடியதைச் சாடும் வகையில் மக்கள் இந்த கோஷத்தை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட ஷேக் ரஷீத் அகமது, இதுபோன்ற கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அமைதியுடன் போராடுவோம் என்று வலியுறுத்தினார்.

 பேச்சு

பேச்சு

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த பேரணியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, "இந்த மாதம் சூழ்நிலைகள் மாறும். இம்ரான் கானின் ஆட்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிலர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இம்ரான் கானுக்கு ஆதரவாகச் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள் அனைவரும் திருடர்கள்" என்றும் கடுமையாகச் சாடினார்.

 இந்தியாவில் சவுகிதார்

இந்தியாவில் சவுகிதார்

சவுகிதார் முழக்கம் இந்தியாவில் மிகவும் பிரபலம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பாதுகாவலர் என்ற முழக்கத்தையே பிரதமர் மோடி முன் வைத்தார். அப்போது 2019 மக்களவைத் தேர்தல் பிரசார சமயத்தில் காங்கிரஸ் கட்சி 'சவுகிதார் சோர் ஹை' என்ற முழக்கத்தை முன்னெடுத்தது. குறிப்பாக, கடந்த 2019இல் இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+