ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 30 ஆயிரம் பேர் இருக்கலாம்: சொல்வது சி.ஐ.ஏ.
வாஷிங்டன்: ஈராக், சிரியாவில் விஸ்வரூபமெடுத்து உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை தாங்கள் கணக்கிட்டிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
ஈராக், சிரியாவில் பெரும் பகுதியைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இது ஈராக், சிரியாவுடன் மட்டும் நிற்காமல் இதர நாடுகளுக்கும் வேகமாக விரிவடையும் அபாயம் இருக்கிறது.
இதனால் இந்த இயக்கத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் மும்முரமாக களம் இறங்கியுள்ளன. ஏற்கெனவே அமெரிக்கா விமானங்கள் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றன. சிரியாவிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.

கணக்குப் போட்டது 10 ஆயிரம் பேர்
இந்நிலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது தகவலின்படி, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தமே 10 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் என்று கருதப்பட்டதாம். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இப்ப 30 ஆயிரம் பேர்
அதாவது 20 ஆயிரம் முதல் 31,500 பேர் வரை அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கலாம்.

தீவிர ஆட்சேர்ப்பு
குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்த இயக்கம் மேற்கொண்டிருக்கிறது.

சிறைவாசிகள் இணைப்பு
தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள சிறைகளில் இருக்கும் சன்னி பிரிவினரையும் அப்படியே இந்த இயக்கம் இணைத்துக் கொள்கிறது.

வெளிநாட்டவர்
இந்த இயக்கத்தில் உள்ள 15 ஆயிரம் பேர் வெளிநாட்டவர். இதில் மேற்குலக நாட்டவர் 2 ஆயிரம் பேர் என்கிறது சி.ஐ.ஏ.












Click it and Unblock the Notifications