24*7 செய்தி சேனல்களின் முன்னோடி.. சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனர் டெட் டர்னர் காலமானார்!
வாஷிங்டன்: சிஎன்என் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கி, 24 மணி நேரச் செய்தி கலாச்சாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஊடக நிறுவனர் டெட் டர்னர், தனது 87-வது வயதில் இன்று காலமானார். தொலைக்காட்சி செய்திகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் டெட் டர்னர். உலக ஊடகங்களின் போக்கையே மாற்றியமைத்த இவரது மறைவு, சர்வதேச ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
உலகெங்கிலும் 24 மணி நேர செய்தி ஒளிபரப்பு என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியான இவர், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல அமைப்புகளுக்குப் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய மிகச்சிறந்த கொடையாளராகவும் மதிக்கப்படுகிறார்.

1980-ல், டெட் டர்னர் முதல் பிரத்யேக தொடர் செய்தி அலைவரிசையாக கேபிள் நியூஸ் நெட்வொர்க்கை (CNN) தொடங்கினார், அது விரைவில் ஊடக உலகின் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. சிஎன்என் ஆரம்பத்தில் பல போராட்டங்களை எதிர்கொண்டது. இந்த முயற்சி வெற்றி பெறாது என்று கருதியவர்களால் அதன் ஆரம்ப ஆண்டுகளில் 'சிக்கன் நூடுல் நெட்வொர்க்' என்று கேலி செய்யப்பட்டது.
ஆனால், 1981-ல் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மீதான கொலை முயற்சி மற்றும் 1986-ல் நடந்த சேலஞ்சர் விண்வெளி ஓடப் பேரழிவு போன்ற செய்திகளை வேகமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி சி.என்.என் தொலைக்காட்சி அலைவரிசை தனது திறமையை நிரூபித்தது.
1990-1991 வளைகுடாப் போரின் போது ஈராக்கிலிருந்து வழங்கிய நேரடித் தொடர் ஒளிபரப்பின் மூலம் சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய அளாவில் கவனம் பெற்றது. CNN-இன் வெற்றியைத் தொடர்ந்து, டர்னரின் நீண்டகாலப் போட்டியாளரான ரூபர்ட் முர்டோக், 1996-ல் ஃபாக்ஸ் நியூஸ் சேனலை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, பல 24*7 செய்தி அலைவரிசைகள் வந்தன.
அந்தவகையில், செய்தி சேனல்களுக்கு முன்னோடி சி.என்.என் தான். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஒருமுறை, சிஐஏ-விடமிருந்து கற்றுக்கொண்டதை விட சிஎன்என்-னிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெட் டர்னரை "ஒலிபரப்பு வரலாற்றின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர், எனது நண்பர். "எனக்கு எப்போதெல்லாம் அவர் தேவைப்பட்டாரோ, அப்போதெல்லாம் அவர் இருந்தார்; ஒரு நல்ல நோக்கத்திற்காகப் போராட எப்போதும் தயாராக இருந்தார்" என்று புகழ்ந்துள்ளார்.
சிஎன்என்-இன் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான மார்க் தாம்சன், டர்னரை "நாம் யாரின் தோள்களின் மீது நிற்கிறோமோ அந்த மாபெரும் மனிதர் மறைந்துள்ளார். இன்று நாம் அனைவரும் ஒரு கணம் ஒதுக்கி, அவரையும், நமது வாழ்விலும் உலகிலும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூருவோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications