தடுமாறிய சார்லஸ்.. பருவநிலை மாற்ற மாநாட்டு மேடை ஏறும்போது சறுக்கிய படிக்கட்டு

Subscribe to Oneindia Tamil

கிளாஸ்கோ: காலநிலை மாற்றத்தை கையாள போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று உலகத்தலைவர்களிடம் இளவரசர் சார்லஸ் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு 2 நாள் நடைபெற்றது.- இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

120 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.. அந்த வகையில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்...

 இந்தியர்கள்

இந்தியர்கள்

இதைதொடர்ந்து பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதற்காக ரோமில் இருந்து பிரதமர் மோடி பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அங்கு காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை எதிர்கொள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 தீர்மானம்

தீர்மானம்

முன்னதாக பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தென்னாப்ரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் சீனாவின் சார்பில் அறிக்கையை அளித்திருந்தார். அந்த அறிக்கையில், ஒரு வருடம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை விரிவாகவே சுட்டிக்காட்டியிருந்தார்...

 வெப்பமயமாதல்

வெப்பமயமாதல்

கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை பாதியாக அதாவது 1.5 டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த இந்த மாநாட்டில் ஒப்புதல் தரப்பட்டது.. 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததுடன், மின் உற்பத்திக்கு முக்கிய எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென, மாநாட்டில் தலைவர்கள் வலியுறுத்தினர்.

 துவக்க விழா

துவக்க விழா

அதேபோல, இந்திய சர்வதேச மன்றம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இம்மாநாட்டில் பங்கேற்றார். துவக்க விழாவில் உரையாற்றுவதற்காக அவர் மேடை ஏறினார்.. அப்போது லேசாக, அங்கிருந்த படியில் தடுமாறி கீழே விழப்போவது போல சென்றார்.. பிறகு சுதாரித்து கொண்டு, கவனமாக நடந்து சென்று மேடையில் உரையாற்றினார்.. இந்த மாநாட்டில் 95 வயதான மகாராணியார் எலிசபெத் தான் கலந்து கொள்வதாக இருந்தது... ஆனால், அவர் உடல்நலம் கருதி இளவரசர் சார்லஸ் பங்கேற்றார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இளவரசர் சார்லஸ் பேசும்போது, "காலநிலை மாற்றத்தை கையாள போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று உலகத்தலைவர்களிடம் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.. மிகப்பெரிய பொருளாதாரங்களின் தலைவர்கள் இதுகுறித்து பேச வேண்டும் என்றும் சார்லஸ் வலியுறுத்தினார்.. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நமக்கெல்லாம் கிடைத்த கடைசி வாய்ப்பு இது என்று எச்சரித்த சார்லஸ், உலகளாவிய வெப்பமயமாதலைத் தணிப்பதற்கு பொது - தனியார் கூட்டுறவில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஆண்டு முதலீட்டு தேவையே, நிலையான எரிசக்தி ஆதாரங்களை அடைவதற்கு ஒரே வழி என்று சார்லஸ் அப்போது தெரிவித்தார்.

பேட்டி

பேட்டி

சில தினங்களுக்கு முன்பு பருவநிலை மாநாடு குறித்து கருத்து தெரிவித்த சார்லஸ், கிளாஸ்கோ நகரில் இந்த மாத இறுதியில் தொடங்கும் பருவநிலை மாநாட்டினால் எந்த பலனும் இருக்காது, வெறும் சம்பிரதாய முறைப்படி, தலைவர்கள் உரை மட்டும் நிகழ்த்துவர் என்று வருத்தம் தெரிவித்த சார்லஸ், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+