கப்பலில் உள்ள 10 பேருக்கு கொரோனா.. நடுக்கடலில் தவிக்கும் 3500 பேர்.. எங்கு செல்வது? ஜப்பானில் பகீர்
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் 3500 பேருடன் கப்பல் ஒன்று நடுக்கடலில் தவித்து வருகிறது.
Recommended Video
டோக்கியோ: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் 3500 பேருடன் கப்பல் ஒன்று நடுக்கடலில் தவித்து வருகிறது. இந்த கப்பலில் உள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. பிறநாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவே, அரசுகள் நடுங்கி, பயந்து வருகிறது .
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது.

என்ன கப்பல்
இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். ஹாங்காங் நகரில் இருந்து ஜப்பானுக்கு இதில் மக்கள் வந்துள்ளனர். ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலருக்கும் பரவியது
முதலில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் போக போக கப்பல் பயணத்திலேயே மற்ற நபர்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தொடுல் மூலம் பரவக்கூடியது ஆகும். அதேபோல் நோய் தாக்குதல் உள்ளவர்கள் தொட்ட பொருளை தொட்டாலும் இந்த வைரஸ் பரவும். கப்பலில் இருக்கும் 80 வயது முதியவரால் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவி உள்ளது.

உறுதி செய்தது
3500 பேர் உள்ள இந்த கப்பலில் 2500 பேர் பயணிகள். 1000 பேர் ஊழியர்கள். இவர்கள் எல்லோரையும் ஜப்பானின் மருத்துவர்கள் நேற்று சோதனை செய்தனர். வேறு ஒரு கப்பலில், நடு கடலுக்கு சென்று, அங்கிருந்து, அந்த சர்ச்சைக்குரிய கப்பலுக்கு உள்ளே சென்று சோதனை செய்தனர். இதில்தான் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

மறுப்பு
இதனால்தான் அந்த கப்பலை உள்ளே அனுமதிக்க ஜப்பான் அரசு மறுத்துள்ளது. துறை முகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. அவர்களை இப்போது உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது. ஆனால் நோய் தாக்காத மற்ற நபர்களும் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் ஹாங்காங்கும் செல்ல முடியாமல், ஜப்பானும் செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications