கொரோனா- அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் ஒரே நாளில் 13,761 பேருக்கு பாதிப்பு- 835 பேர் பலி
பிரேசிலியா: உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடும் நாடாக பிரேசில் உருவெடுத்து வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 13,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 835 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துவிட்டனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,24,474 ஆக உயர்ந்தும் உள்ளது.
அதேநேரத்தில் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை மொத்தம் 17,03,648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 1,715 பேர் பலி
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பிரேசிலும் இணைந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,57,593 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 27,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் 1,715 பேர் கொரோனாவால் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளனர்.

பிரேசிலில் துயரம்
அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலக நாடுகளில் பிரேசிலில்தான் நேற்று அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் மொத்தம் 13,761 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 2,02,918 ஆக அதிகரித்தது. அதேபோல் பிரேசிலில் கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றன. கொரோனாவால் பிரேசிலில் நேற்று மட்டும் 835 பேர் மாண்டு போயுள்ளனர். பிரேசிலில் இதுவரை மொத்தம் 13,993 பேர் கொரோனாவால் இறந்து போயுள்ளனர்.

கொரோனா மரணங்களில் 6வது இடம்
உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் பட்டியலில் பிரேசில் 6-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 86,912; இங்கிலாந்தில் 33,614; இத்தாலியில் 31,368 ; பிரான்ஸில் 27,425; ஸ்பெயினி 27,321 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 14,57,593 பேரும் ஸ்பெயினில் 2,72,646 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக ரஷ்யாவில் மொத்தம் 2,52,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியா 12-வது இடம்
கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா 12-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,997 ஆக இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நீடித்தால் சீனாவைவிட அதிகமாகி 11-வது இடத்துக்கு இந்தியா சென்றுவிடும்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications