சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் மோசமாகும்.. ஹு

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டால் வருங்காலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Coronavirus May Gets Worse And Worse | WHO on Covid 19 | Oneindia Tamil

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவும் பிரேசிலும் மிகவும் மோசமான பாதிப்படைந்துள்ளது.

    Coronavirus crisis gets worse and worse, WHO warns

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஞாயிற்றுக்கிழமையில் உலகளவில் புதிதாக 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 நாடுகளில் இருந்து 80 சதவீதமும் வெறும் இரு நாடுகளிலிருந்து 50 சதவீதமும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு எப்போதும் நம்பர் ஒன் எதிரியாகவே இருக்கிறது. பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. அடிப்படை விஷயங்களை பின்பற்றாவிட்டால், தொற்றுநோய் மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்.

    வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்றார். கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த நோயிலிருந்து தற்காத்து கொள்ள மாஸ்க்கும் சமூக இடைவெளியும் முக்கியம் என ஹு வலியுறுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+