சீனாவில் ஒரே நாளில் 100 பேர் வரை பலி.. 902 ஐ தொட்டது பலி எண்ணிக்கை.. நடுங்க வைக்கும் கொரோனா!
சீனாவில் கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 902 ஐ தொட்டுள்ளது.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 902 ஐ தொட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின் வேறு ஒரு வகைதான் சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது.
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

எத்தனை பேருக்கு
சீனாவில் கொரோனா வைரசால் பலி எண்ணிக்கை 902ஐ தொட்டுள்ளது. நேற்று மட்டும் இதனால் 90 பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 3123 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 40000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தொடும்
இந்த மாத இறுதிக்குள் கொரோனா காரணமாக சீனாவில் மட்டும் 5000 பேர் வரை பலியாக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் வரை இந்த நோயால் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. அதனால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான விஷயம். இந்த வைரசுக்கு எதிரான முழுமையாக மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .

பெரிய அளவில் தோல்வி
சீனாவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். டிசம்பர் இறுதியிலேயே இந்த வைரஸ் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுக்கு தெரிந்தது. ஆனால் அந்த விஷயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்துவிட்டது. இப்போது வரை அந்த வைரஸ் எங்கு தோன்றியது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் சீனா பெரிய அளவில் தோல்வி அடைந்துவிட்டது.

மறைக்கிறார்களா?
இந்த நிலையில் சீனா இந்த பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அங்கு இதைவிட அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டி இருக்க வாய்ப்புள்ளது என்று சில ஆராய்ச்சி நிறுவனங்கள் குற்றச்சாட்டு வைக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications