காலி அடுக்குமாடி குடியிருப்பு... வீட்டின் கழிப்பறையில்... மனிதக் கழிவிலும் கொரோனா!!
பீஜிங்: சீனாவின், குவாங்சோ மாகாணத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் கழிப்பறை குழாய் வழியாக வைரஸ் கிருமிகள் வெளியேறி காற்றின் மூலம், ஹாங்காங்கில் பெரிய அளவில் சார்ஸ் வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் மக்கள் குடியில்லாத வீடுகளின் கழிப்பறையில் இருக்கும் ஷவர், சிங்க், குழாய் ஆகியவற்றிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை சீனாவின் தொற்று நோய் தடுப்பு மையம் தெரிவித்து இருந்தது. இந்த வீட்டுக்கு கீழ் தளத்தில்தான் ஐந்து பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வீட்டின் கழிப்பறையில் இருந்து வெளியேறிய காற்றில் இருந்தும், கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மனிதர்களின் மலத்தில் இருந்தும், வெளியேறும் காற்றில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து உருவானதுதான் சார்ஸ். இந்த நோய்க்கு ஹாங்காங்கில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 42 பேர் உயிரிழந்து இருந்தனர். இதற்குக் காரணம், அந்த அடுக்குமாடியில் சுமார் 329 பேருக்கு இதேபோன்று கழிப்பறை வாயிலாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது தெரிய வந்தது. கழிப்பறையில் இருக்கும் குழாய் வாயிலாக வைரஸ் வெளியேறும்போது, மற்றவர்களது வீட்டின் கழிப்பறை குழாய் சேதம் அடைந்து இருந்தால், எளிதாக அதன் வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறி இருந்தன. அவ்வாறுதான் ஹாங்காங்கிலும் 329 பேருக்கு தொற்று பரவியது என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிப்பறைகளில் போதிய நீர் இல்லாமல் இருந்தாலும், கழிவுகள் குழாய்களில் சரியாக வெளியேறாமல், வைரஸ்களை பரப்பும் என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இயக்குநர் லிடியா மொரவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பொதுவாக மூச்சுக் குழாயில் இருந்து வெளியேறும் திரவம் மற்றும் உமிழ்நீர் வழியாகத்தான் வெளியேறும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா பாதித்த மனிதரின் மலத்தில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவும் என்பதை முன்பே உறுதிபடுத்தி இருந்தது.
குவாங்க்டாங் மாகாணத்தில் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 73 பேருக்கு அவர்களது மலத்தில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முந்தைய ஆய்வுகளும் கழிப்பறைகளும் கொரோனா வைரஸை பரப்பும் என்று தெரிவித்து இருந்தன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications