முதலிடத்தில் இந்தியா.. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதா.. என்ன காரணம்.. பகீர் ஆய்வு
கொரோனா குறித்த போலி செய்திகளை இந்தியா அதிகம் பரப்புகிறதாம்
ஒட்டாவா: கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த 2 வருடமாகவே கொரோனா வைரஸ் குறித்த குழப்பங்களும், கலக்கங்களும், சந்தேகங்களும் நிலவி வந்து கொண்டே இருக்கிறது.
புதுவகை வைரஸ் என்பதால், அதற்கான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக லட்சக்கணக்கான டாக்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டும் வருகின்றனர்.

இந்தியா
இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியபோது, அந்த நோயை பற்றிய புரிதல் எதுவுமே இல்லாமல் இருந்தது.. எனவே, கற்பனைக்கும் ஒவ்வாத பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. உதாரணத்துக்கு எலுமிச்சை சாறு குடித்தால் கொரோனா வராது, ஏலக்காய், கற்பூரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், கதிர்வீச்சு மூலம் கொரோனா பரவுகிறது என்ற தகவல்கள் மருத்துவ ஆதாரமின்றி பரப்பப்பட்டன.

முதலிடம்
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.. கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.. முகமத் சகீர் அல் ஜமான் என்பவர், இந்த போலியான தகவல் குறித்து சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு ஆய்வு மேற்கொண்டார்.

தகவல்கள்
கனடாவில் உள்ள அல்பட்ரா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் அவர்.. கொரோனாவைரஸ் குறித்து மொத்தம் 138 நாடுகளில் இருந்து 9,6557 பரப்பப்பட்ட தகவல்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன... இதில் 85 சதவீதத்துடன் சோஷியல் மீடியாவில் உள்ளது தெரியவந்துள்ளது.

அறியாமை
இப்படி சோஷியல் மீடியா ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து பார்த்ததில், 91 சதவிகித கொரோனா குறித்த போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.. இதில் 18 சதவிகிதம் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளதாம்.. பிரேசில் 9 சதவிகிதத்துடன் 2-ம் இடத்திலும் உள்ளது.. கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் இப்படியெல்லாம் தவறான தகவல்களை பரப்ப காரணம் என்று கூறப்படுகிறது.. மேலும் அறியாமையும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications