நடுங்கும் ரஷ்யா.. 1.70 லட்சத்தை நெருங்கும் கேஸ்கள்.. கதிகலங்கும் மக்கள்.. துரத்தும் கொரோனா..!
ரஷ்யாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 21,624 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்... இது அந்நாட்டு மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
Recommended Video
உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது.. தொற்று அதிகமுள்ள நாடுகளின் லிஸ்ட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்தும் போய் கொண்டிருக்கிறது.. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒன்றரை கோடி பேருக்கும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்... சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. .. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது... இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

கலக்கம்
இப்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது... உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

ரஷ்யா
இதற்கு அடுத்தப்படியாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.... ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 21,624 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளது.

பலி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 816 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 1.70 லட்சத்தை தாண்டி உள்ளது அம்மக்களுக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது... அங்கு தொற்றில் இருந்து 58.84 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்... மேலும், இப்போதைக்கு 5.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.. இதையடுத்து, தடுப்பூசி விஷயத்தில் தன் மொத்த கவனத்தையும் தீவிரமாக திருப்பி கொண்டிருக்கிறது ரஷ்யா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications