கொரோனா வேக்சின்.. மொத்தமாக வாங்கி குவித்த கோடீஸ்வரர்கள்.. ரஷ்யாவில் கொதிக்கும் மக்கள்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி இருப்பதாக கூறி வரும் நிலையில் அந்த மருந்துக்கு ரஷ்யாவில் பணக்காரர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த நாட்டில் அரசை கட்டுப்படுத்தி வரும் பணக்காரர்கள் இந்த மருந்தை முதல் ஆளாக வாங்க காத்து இருக்கிறார்கள்.

Recommended Video

    Corona vaccine : முன்பே வாங்கி குவிக்கும் ரஷ்ய கோடீஸ்வரர்கள்

    கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி உள்ள மருந்து தற்போது உலகம் முழுக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

    ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்து இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை இரண்டு கட்டமாக சோதனை செய்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.

    எப்போது வரும்

    எப்போது வரும்

    ஜூன் 18ம் தேதி 18 பேர் மீதும், ஜூன் 23ம் தேதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்து இருக்கிறார்கள். இந்த சோதனை வெற்றி பெற்றுவிட்டது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 3ம் தேதி இந்த மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு செல்லும். அதற்கு முன் மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் அமலுக்கு வரும். இதை மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களில் கொண்டு வருவோம், என்று ரஷ்யா கூறியுள்ளது .

    இப்போதே வாங்க முடிவு

    இப்போதே வாங்க முடிவு

    இந்த நிலையில் இந்த கொரோனா தடுப்பு மருந்தை இப்போதே வாங்க ரஷ்யாவின் கோடீஸ்வரர்கள் முடிவு செய்துள்ளனர். அதிலும் அந்நாட்டு அரசியலை கட்டுப்படுத்தி வரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குதான் இந்த மருந்தை முதல் ஆளாக கொடுக்க இருக்கிறார்கள். இவர்களுக்கு மருந்தை கொடுத்தது போகவே மற்றவர்களுக்கு மருந்தை கொடுக்க இருக்கிறார்கள்.

    என்ன சொல்கிறது

    என்ன சொல்கிறது

    இதில் ஏற்கனவே சில கோடிஸ்வரர்களுக்கு இந்த கொரோனா தடுப்பு மருந்தை கொடுத்துவிட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்பதால் அந்த மருந்தை மக்களுக்கு கொடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். முக்கியமாக அந்நாட்டு அரசுக்கு நிதி உதவியை வழங்கும் யுனைட்டட் கோ ரூசல் போன்ற நிறுவனங்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    பணம்

    பணம்

    இதற்காக அவர்கள் பல கோடிகளை களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது வரை உருவாக்கப்பட்ட அனைத்து மருந்தும் வாங்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். பெரிய கார்ப்பரேட் லாபி இதில் செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை மிகவும் சீக்ரெட்டாக அந்நாட்டு கோடிஸ்வரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது தற்போது ரஷ்ய மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த விஷயம் மொத்தமாக வெளியே தெரியாத வகையில் ரஷ்யா இந்த பணிகளை செய்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+