204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1014386 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 53158 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    சார்ஸ் தொடங்கி கொரோனா வரை உருவாக காரணமாக அமைந்த சட்டம்

    உலகின் 204 நாடுகளில் கொரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது. தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லாத நிலையில் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் எதிரியை சமாளிக்க முடியாமல் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    Coronavirus update: Positive cases in world rise to1,014,386, death toll at 53,158

    குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி, ஈரான், பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, ஆஸ்ட்ரியா., உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே ஒரே நாளில் அதிகபட்சமாக பிரான்சில் 1355 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உலகிலேயே மிக அதிகமாக ஒரே நாளில் 29317 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 2,44,320 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 960 உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 760 பேர் உயிரிழந்தனர். 115242 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் நேற்று ஒரேநாளில் 960 உயிரிழந்தனர்.

    ஒட்டுமொத்தமாக 112065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 6813 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84794 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1014386 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 53158 ஆக உயர்ந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+