இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பல் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு!
டமாஸ்கஸ்: இத்தாலி அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கவிழ்ந்து 32 பேரை பலி கொண்ட கப்பல் பெரும் பொருட்செலவில் நிமிர்த்தி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ந் தேதி கோஸ்டா கன்கார்டியா என்ற உலகின் மிகப் பெரிய பயணிகள் சொகுசு கப்பல் இத்தாலியின் கடற்கரை கிராமமான டஸ்கன் தீவு அருகே கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்தது. அப்போது கப்பலில் 4 ஆயிரம் பயணிகள் இருந்தனர்.
இதில் கடலில் மூழ்கி 32 பேர் பலியாகினர். கப்பலில் இருந்த எஞ்சியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்தக் கப்பலை மீட்பதற்காக முன்னேற்பாடுகளை கப்பல் மீட்புக் குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கினர்.
பின்னர் கடந்த திங்கள்கிழமை ராட்சத கிரேன்கள், ஹைட்ராலிக் இயந்திரங்கள், இழுவை கப்பல்களை பயன்படுத்தி இந்த கப்பலை நிமிர்த்தும் பணி மும்முரமாக தொடங்கியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 18 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, நான்கு மணிக்கு கப்பலை நிமிர்த்தும் பணி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கப்பலை மீட்கும் பணி முடிவடைந்துவிட்டது. கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கப்பட்ட பின், விரைவில் இந்த தீவிலிருந்து இக்கப்பல் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications