மருமகளை உயிரோடு புதைத்து.. கான்க்ரீட் போட்டு மூடி.. கொடூர பிரேசில் தம்பதி!
பேரப்பிள்ளைகளை அபகரிக்க மருமகளை மாமனார், மாமியார் கொன்றுள்ளனர்.
சாவ் பாலோ, பிரேசில்: நம்ம ஊர்ல இருக்கிற சில மாமியார்களை விட மோசமா இருக்காங்களே அந்த வெளிநாட்டில்!! மருமகளை என்ன பாடு படுத்தியிருக்காங்க பாருங்க!
பிரேசில் நாட்டில் சாவ் பாலோ என்ற நகர் இருக்கிறது. இந்த நகரில் மார்சியா மிராண்டா என்ற இளம் பெண் வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் புருஷனுடன் ஒத்துவராத காரணத்தினால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

மாமனார், மாமியார்
கல்யாண வாழ்க்கை தோல்வி என்றாலும், தன் 2 குழந்தைகளும்தான் உலகம் என்றே மிராண்டா இருந்து விட்டார். ஆனால் இந்த குழந்தைகளை மிராண்டாவிடம் விட மாமனாரும், மாமியாரும் விரும்பவில்லை. நம்ம பேரகுழந்தைகள் மிராண்டா கிட்ட இருக்கவே கூடாது என முடிவெடுத்தனர். மாமனார் பெயர் பெர்னாண்டோ டி ஒலிவேரா, 62 வயதாகிறது. மாமியார் பெயர் ஐசில்டா, 60 வயதாகிறது.

பேரப்பிள்ளைகள்
இந்த ரெண்டு பெரிசுகளும் சேர்ந்து மிராண்டாவை கொலை செய்ய பிளான் பண்ணினார்கள். மருமகள் உயிரோடு இருக்கிறவரைக்கும் பேரக்குழந்தைகளை தங்களுடன் விட மாட்டாள் என முடிவெடுத்தனர். அம்மா செத்து போய்ட்டால், பிள்ளைகள் தானாக தங்களிடம் வந்துவிடுவார்கள் என்பதுதான் இவர்களின் ஐடியா!
அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி மாமனாரும், மாமியாரும் மிராண்டாவை சந்தித்து, "நாங்கள் ஒரு பிளாட் வாங்கி இருக்கிறோம். அந்த நிலத்தை நீ வந்து அதை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டார்கள். முதலில் மிராண்டா மறுத்தாலும், 2 பேரும் வற்புறுத்தி கூப்பிடவும் அவர்களுடன் சென்றார்.

கான்கிரீட்
சாவ பாலோ என்ற இடத்தில்தான் பிளாட் உள்ளதாக மிராண்டாவை காரில் கூட்டி சென்றார்கள். பிறகுதான் அங்கே தோண்டப்பட்ட குழிக்குள் மிராண்டாவை உயிரோடு தள்ளி கான்கிரீட் போட்டு மூடியும் விட்டார்கள்.

உயிரோடு புதைத்தனர்
இதன்பிறகு மிராண்டாவை காணோம் என்று புகார் எழுந்ததையடுத்து தற்போது போலீசார் இதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், மாமனாரும், மாமியாரும், மிராண்டாவை உயிரோடு புதைக்கவே அந்த நிலத்தை விலைக்கு வாங்கியதாக தெரியவந்தது.

உருக்குலைந்த மிராண்டா
எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்கும் மிராண்டாவின் உடலை உருக்குலைந்து, மிகவும் மோசமான நிலையில்தான் போலீசார் மீட்டார்கள். இருந்தாலும் மிராண்டாவின் விரல்கள்தான் அவரை போலீசுக்கு அடையாளம் காட்டியது. பேரப்பிள்ளைகளை இந்த தாத்தாவும், பாட்டியும் வளர்த்திருந்தால் அவர்களின் கதி??
Image Source: FocusOn News
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications