பக்கத்து வீட்டு பெண் போட்ட 'பலான' சத்தம்.. பதம் பார்த்தது முதியவரை!
வாஷிங்டன்: சத்தம்போட்டு செக்ஸ் வைத்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட முதியவர் ரத்தம் வருமளவுக்கு அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹவ்கின்ஸ் கன்ட்ரியின், ரோஜர்வில்லே நகரை சேர்ந்தவர் மார்க் காலின். சம்பவத்தன்று இரவு இவரது பக்கத்து வீட்டில் இருந்து, 'ஐயோ.. அம்மா..' என்று பெண் முனகும் சத்தம் கேட்டுள்ளது. தூக்கம் கலைந்த காலின், பக்கத்து வீட்டு ஆண்தான், அவரது மனைவியை போட்டு அடித்து துவைத்துக் கொண்டுள்ளார் என்று பயந்துவிட்டார்.

உடனடியாக, இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து அலர்ட் செய்துள்ளார். பக்கத்து வீட்டு பெண்மணியை காப்பாற்ற உடனே விரைந்து வாருங்கள் என்று கூறியுள்ளார். போலீசாரும், காரில் பறந்து வந்து சத்தம் வந்த வீட்டு காலிங் பெல்லை அடித்துள்ளனர்.
உள்ளேயிருந்து ரிச்சர்ட் (33) மற்றும் அவரது மனைவி எரின் லாசன் (32) ஆகியோர் கலைந்த கோலத்துடன் வெளியே வந்துள்ளனர். போலீசார் விசாரணையின்போது, மனைவியை தான் அடித்து துன்புறுத்தவில்லை என்றும், செக்ஸ் வைத்தபோது, மனைவி முனகிய சத்தம்தான் அப்படி கேட்டுள்ளது என்றும் ரிச்சர்ட் தெரிவித்தார். எரினும் வெட்கத்தோடு அதை ஆமோதித்தார்.
இதையடுத்து போலீசார், "கொஞ்சம் பார்த்து பண்ணுங்கப்பா" என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தனர். ஆனால், அரை மணி நேரம் கழித்து மீண்டும் காலினிடமிருந்து போலீசாருக்கு போன் வந்தது. "இப்போது என்னய்யா.." என்று எரிச்சலில் போலீசார் கேட்டனர். "இப்போது என்னை போட்டு புருஷனும், பொண்டாட்டியும் அடித்துவிட்டார்கள் சார்.." என்று கதறியுள்ளார் காலின்.
விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் காலின் ரத்த காயத்துடன் துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செக்ஸ் வைக்க தொல்லை செய்ததாக கூறி, ரிச்சர்ட் மற்றும் எரின் இருவரும் இரும்பு கம்பியால் காலினை அடித்தது விசாரணையில் தெரியவந்தது. தம்பதிகள் தற்போது கம்பி எண்ணுகிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications