அமெரிக்காவில் இந்திய விசா சேவையை கவனிக்கவிருக்கும் காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட் மற்றும் விசா சேவையை காக்ஸ் அன்ட் கிங்ஸ் குளோபல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் ஒப்படைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட், விசா சேவையை பிஎல்எஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்டிடம் இருந்து காக்ஸ் அன்ட் கிங்ஸ் குளோபல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் அளித்துள்ளது.
பிஎல்எஸ் நிறுவனம் விசா, ஓசிஐ, பிஐஓ மற்றும் இந்திய குடியுரிமை சான்றிதழ் சேவை ஆகியவற்றை வரும் 20ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளும். இதையடுத்து இந்த சேவைகளை காக்ஸ் அன்ட் கிங்ஸ் வரும் 21ம் தேதி முதல் செய்யத் துவங்கும்.
வாஷிங்டனில் இந்திய தூதரகம் உள்ளது. இது தவிர நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, ஹூஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் கன்சுலேட் அலுவலகங்கள் உள்ளன.
பிஎல்எஸ் நிறுவனம் வரும் 16ம் தேதி வரை தான் விண்ணப்ங்களை பெறும். அவசரமாக விசா கோரும் விண்ணப்பங்களை மே 20ம் தேதி முற்பகல் வரை பிஎல்எஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.
அதனால் விண்ணப்பங்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளவர்கள் அவை காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனத்தை மே 21ம் தேதி அன்றோ அதன் பிறகோ சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் காசோலை அல்லது மணி ஆர்டர் போன்றவை காக்ஸ் அன்ட் கிங்க்ஸ் பெயரில் இருக்க வேண்டும்.
பிஎல்எஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் அது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் மே 20ம் தேதி வரை கண்காணிக்கலாம். இதையடுத்து மே 21ம் தேதி முதல் அந்த விண்ணப்பங்கள் குறித்த நிலையை காக்ஸ் அன்ட் கிங்ஸ் இணையதளத்தில் பார்க்கலாம்.
காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் அலுவலக விவரங்கள் விரைவில் தெரிக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications