அபுதாபியில் தமுமுக சார்பில் கிரிக்கெட் போட்டி.. கோப்பையை வென்றது இ.டி.ஏ அணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இ.டி.ஏ. அணியும், அல் சீர் அணியும் பங்கு பெற்றது. இதில் இ.டி.ஏ. கம்பெனி அணி வெற்றிப்பெற்றது.

அபுதாபி தமுமுக விளையாட்டு அணியின் சார்பில் அபுதாபி பனியாஸில் கடந்த 3 ஆம் தேதி அன்று கிரிக்கெட் போட்டி துவங்கியது. அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை சேக்தாவுது போட்டியை துவக்கி வைத்தார்.

cricket tournmament conducted in abudhabi

மூன்று வாரம் நீடித்த கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி வெள்ளிக்கிழமை (17.03.2017) மதியம் 3 மணிக்கு நடைப்பெற்றது. இறுதி சுற்றில் இ.டி.ஏ. கம்பெனி அணியும் - அல் சீர் அணியும் மோதின. இதில் இ.டி.ஏ. கம்பெனி அணி வெற்றிப்பெற்றது.

இ.டி.ஏ. கம்பெனி அணிக்கு அமீரக தமுமுக செயலாளர் அப்துல் ஹாதி வின்னர் வெற்றிக் கப்பை வழங்கி தமுமுகவின் செயல்பாடுகளை விளக்கி சிறப்பித்தார். அட்டகாசமான பணப்பரிசை அபுதாபி ராயல் சில்க்ஸ் சிங்கப்பூர் கடை உரிமையாளர் மெய்தீன் வழங்கி கவுரவித்தார்.

அல் சீர் அணிக்கு ரன்னர் கப்பை அபுதாபி தமுமுக பொருளாளர் அபுல் ஹசன் வழங்கினார். பணப்பரிசை அபுதாபி தமுமுக துணைச்செயலாளர் சேக்தாவுது வழங்கினார்.  இ.டி.ஏ. அணியை சேர்ந்த ராஜ்கபூருக்கு மேன் ஆப் சீரியஸ் கப்பை தமுமுக மர்கஸ் நிர்வாகி உஸ்மான் வழங்கினார். ஈடிஏ அணியை சேர்ந்த சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களுக்கு மேன் ஆப் மேட்ச் கப்பை சகோதரர் பீர் முஹம்மது அவர்கள் வழங்கி கவுரவித்தார்.

சிறப்பாக பணி செய்த ஜெய்லாபுதீன், கபூர் ஆகிய நடுவர்களுக்கு அபுதாபி தமுமுக மண்டல துணைச் செயலாளர் ஹாஜாபாய், என்சிஇ கேம்ப் நிர்வாகி நஜிமுதீன் சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தனர். அபுதாபி மண்டல மமக செயலாளர் அல்அமீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். என்சிஇ கேம்ப் தமுமுக துணைச்செயலாளர் காமில் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cricket tournament was held in Abu Dhabi
Please Wait while comments are loading...