காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் செய்தியை பாரபட்சமாக ஒளிபரப்புவதா?: பிபிசிக்கு எதிராக போராட்டம்
லண்டன்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் குறித்த செய்திகளை பாரபட்சமாக ஒளிபரப்புவதாக கூறி பிபிசி நிறுவனத்துக்கு எதிராக இங்கிலாந்து முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது கண்மூடித்தனமான வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் இந்த அப்பட்டமான இனப்படுகொலையை உலக நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. எகிப்து மட்டுமே சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் லண்டன் பிபிசி நிறுவனமானது காஸா மீதான தாக்குதல் செய்திகளை ஒளிபரப்பும் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இங்கிலாந்து முழுவதும் பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. லண்டனில் பிபிசி அலுவலகம் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிபிசியின் பாரபட்சமான ஒளிபரப்பை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications