For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடல் காஸ்ட்ரோ மறைவு.. அமெரிக்காவில் ஆடிப்பாடி கொண்டாடிய காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

புளோரிடா: கியூபா நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவை, அமெரிக்காவிலுள்ள, கியூப மக்களில் ஒரு பிரிவினர் ஆடிப்பாடி, கொண்டாடியுள்ளனர்.

புரட்சியாளர்கள் பலருக்குமே, கொடுங்கோலர்கள் என்ற பட்டப்பெயரும் கூடவே வந்துவிடுவது உண்டு. அதேபோலத்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்ற பிடல் காஸ்ட்ரோவையும், சர்வாதிகாரி என கூறும் மக்களும் உண்டு.

Cuban exiles in Miami's 'Little Havana' celebrate as Fidel Castro dies

அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் குடியேறிய கியூப மக்களில் ஒரு பிரிவினர்தான் இன்று கொண்டாட்டங்கள் நடத்தியுள்ளனர். புளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அந்த பகுதி நேரப்படி அதிகாலை 3.55 மணிக்கெல்லாம், சாலைகளில் கூடிய நூற்றுக்கணக்கான அமெரிக்க, கியூபர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தை பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். இவர்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி என்பதால் லிட்டில் ஹவானா என்றே அப்பகுதிக்கு பெயரும் வந்தது. ஹவானா என்பது கியூபா நாட்டு தலைநகர் பெயர்.

"முதியவர் இறந்துவிட்டார்", "இனிமேல் கியூபா விடுதலை பெற்றுவிட்டது" என்றெல்லாம் அவர்கள் கோஷமிட்டனர். அதேநேரம், கியூபாவிலோ, பிடல் காஸ்ட்ரோ மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கதினமாக அனுசரித்தனர்.

English summary
In Little Havana in Miami, the crowd celebrating after Fidel Castro's death sings La Bayamesa, the Cuban national anthem. Quite a moment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X