பதிலடி கொடுத்த இந்தியா.. பாகிஸ்தானில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் பதில் தாக்குதல்
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது. இதனை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து அழித்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உச்ச கட்ட போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் விமான நிலையம், பல்கலைக்கழகம் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்சக்கட்ட பதற்றம்
பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த எப்.,16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 ஜேஎப் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் இந்திய தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாகிஸ்தானின், சியால்கோட் நகரிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. லாகூரில் பாகிஸ்தானின் ஏவுகணை தளத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது.
பாகிஸ்தான் முழுக்க ஊரடங்கு?
இதற்கிடையே, பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது பற்றிய உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் சிறையில் உள்ள இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications